ரோபோக்களின் புதிய முயற்சி - அமெரிக்காவில் அசத்தும் ஜார்கண்டை சேர்ந்த மாணவர்!

 
tn

மின்னல் வேகத்தில் தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில்,  இயந்திரங்களில் இவை  புகுந்தும் பல்வேறு வேலைகளில் இருந்தும் மனிதர்களை வெளியேற்றி வருகின்றன. அந்த வகையில் நம்முடைய வேலைகளில் தற்போது புகுத்தப்பட்டிருக்கும் வியப்புக்குரிய ஒன்றுதான் ரோபோக்கள்.  நம்முடைய வேலைகளை நம்மை விட வேகமாகவும்,  துல்லியமாகவும் செய்து முடிப்பதில் ரோபோக்களுக்கு இணை அவை மட்டுமே. இதன் காரணமாக  மனித ஆற்றல் என்பது குறைக்கப்படுகிறது. பல்வேறு துறைகளில் தற்போது ரோபோக்கள் இயங்கி வரும் நிலையில் அவற்றை எப்படி எல்லாம் மேம்படுத்தலாம் என்பதை மனித மூளைகளே  அலசி ஆராய்ந்து வருகின்றன. 

tn

அந்த வகையில் ரோபோக்களை முடிந்தவரை திறமையாக பயன்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தின் ரோபாட்டிக்ஸ் இன்ஸ்டிடியூட்டில் பயின்று வரும் பட்டதாரி மாணவர் ஷிவம் வாட்ஸ் தனது முயற்சியினால் ரோபோக்களை பல வேலைகளை அடுத்தடுத்த செய்யும்படி திட்டமிட்டு அதில் வெற்றியும் கண்டுள்ளார். காரக்பூர் ஐஐடி மாணவரான இவர், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். தற்போது அமெரிக்காவின் அல்காரிதம் அடிப்படையில் ஒரு ரோபோவுக்கு புதிய பல விஷயங்களை கற்பிப்பது கடினமாக இருந்தாலும் கூட அதில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.  ஒரு இயந்திரத்திற்கு ஒரு வேலை மிகவும் புதியதாக இருந்தால், ஒரு மனிதன் அதைச் செய்வது நல்லது. தற்போதைய நிலையில், மனிதர்களுக்கு எந்த வகையான வேலைகள் மிகவும் பொருத்தமானவை என்பதை பார்க்காமலே மாணவர் ஷிவம்  இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

tn

ரோபோக்கள் நாம் கொடுக்கும் கட்டளைகளை சரிவர செய்ய திட்டமிட ப்பட்டுள்ளது.  அதேசமயம் ரோபோக்கள் ஒரு வேலையை செய்ய திட்டமிடப்பட்டால் அதை மாதங்கள் அது வருடங்கள் மீண்டும் மீண்டும் செய்யும் போது அவை சற்று ஆச்சரியமான ஒன்றாக தான் நமக்கு தெரிகிறது. தனது ஆய்வறிக்கையில் உள்ள ஒரு முக்கிய அனுமானமாக ஒன்றை குறிப்பிட்டு கூறும் அவர், நீங்கள் ஒரு ரோபோவைக் கற்பிக்கும்போது, ​​​​அது ஒரு திறமையைக் கற்றுக்கொள்கிறது, ஆனால் ஒரே ஒரு பணியில் மட்டுமே. ஆனால் அது பல பணிகளில் பயிற்சி பெற்றால், திறன்கள் சிறப்பாகப் பயன்படுத்தப்படும் என்பதை இதன் மூலம் அறிந்ததாக அவர் கூறியுள்ளார்.