ஆப்கானிஸ்தானில் வாட்டி வதைக்கும் உறைபனி : 9 நாட்களில் 78 பேர் பலி..

 
ஆப்கானிஸ்தான் குளிர்

ஆப்கானிஸ்தானில் நிலவும் கடும் குளிரால் கடந்த 9 நாட்களில்  மட்டும் 78 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் வாட்டி வதைக்கும் உறைபனி : 9 நாட்களில் 78 பேர் பலி.. 

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில  நாட்களாக உறைபனி மற்றும் கடுமையான குளிர் நிலவி வருகிறது.  குறிப்பாக காபூல் உள்ளிட்ட இதர மாநிலங்களில் வெப்பநிலை கடுமையாக சரிவை சந்தித்துள்ளது. கோர் பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 28 டிகிரிக்கும் கீழ் பதிவாகியிருக்கிறது.   எங்கு பார்த்தாலும் பனிக்கட்டியாக தென்படும் அளவிற்கு, வெண்பனி போர்த்தியது போல் உறைபனி நிலவுகிறது.  இந்த உறைபனியில்  உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 9 நாட்களில் 78 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் வாட்டி வதைக்கும் உறைபனி : 9 நாட்களில் 78 பேர் பலி.. 

மேலும் குழந்தைகள், பெண்கள் உள்பட 140 பேர் கார்பன் மோனாக்சைடு பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கடும் குளிரை தாங்க முடியாமல்,  கடந்த 9 நாட்களில் மட்டும்   77 ஆயிரம் கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இதுகுறித்து ஆப்கான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, “சமீப காலங்களில் மிகவும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.  இந்த குளிர் அலை மேலும் 1 வாரம் நீடிக்கும்” என்று தெரிவித்துள்ளது. இந்த கடும் குளிரால் மக்கள் வீடுகளுக்குளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே  வரும் நிலை இருப்பதால் மக்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.