தேசிய அளவில் துக்கம்: அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 21 பேர் உடல் கருகி பலி

 
g

 அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தினால் மூச்சு திணறியும் உடல் கருகியும் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

gg

 பாலஸ்தீனத்தில் காசாவின் வடக்கே ஜபாலியா என்கிற பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.  இந்த தீ விபத்து அடுக்குமாடி முழுவதும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது.  

ag

 அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கரும்புகை வெளியேறி அப்பகுதியே புகைமண்டலமாக மாறியது.  இந்த விபத்தில் மூச்சு திணறியும் உடல் கருகியும் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.   உயிரிழந்த 21 பேரில் 7 குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது .

 பாதிக்கப்பட்டோரை தீயணைப்பு படையினரே மீட்டு உள்ளனர்.   உயிரிழந்தவர்களின் முழுமையான விவரங்கள் தெரியவில்லை.   காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்து வருகின்றனர். 

ga

 ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் தீயணைப்பு படை வீரர்கள்.   இந்த தீ விபத்து குறித்து அறிந்த பாலஸ்தீன அதிபர் இரங்கல் தெரிவித்துள்ளார்.  தேசிய அளவில் துக்கம் மனசரிக்கப்படும் , கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.