அமேசான் நிறுவனத்தின் புத்தாண்டு பரிசு - 18,000 ஊழியர்களின் வேலைக்கு ஆப்பு

 
amazon

அமேசான் நிறுவனம் மேலும் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா பரவலுக்கு பிந்தைய கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக டிவிட்டர், மெட்டா நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன. ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டன. இதேபோல் அமேசான் நிறுவனமும் கடந்தாண்டு நவம்பர் மாதம் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இந்நிலையில், மேலும் 18,000 ஊழியர்கள் ஆமேசான் நிறுவனம் பணி நீக்கம் செய்யவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமேசான் தலைமை செயல் அதிகாரி ஊழியர்களுக்கு இன்று காலை அனுப்பிய செய்தியில், தற்போது நிலவும் கடினமான பொருளாதார சூழல் காரணமாக மேலும் 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளோம். இந்த பணிநீக்கமானது இந்தாண்டு தொடக்கத்திலேயே நடைபெறவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. அமேசான் நிறுவன வரலாற்றில் இது மிகப்பெரிய பணிநீக்கம் ஆகும்.  இருப்பினும் அதன் 15 லட்சம் உலகளாவிய பணியாளர்களில் இது ஒரு பகுதியே.