டுவிட்டர், மெட்டாவை தொடர்ந்து அமேசானிலும் பணிநீக்க நடவடிக்கை - 10,000 ஊழியர்களின் கதி?

 
amazon amazon

டுவிட்டர் மற்றும் மெட்டா நிறுவனத்தை தொடர்ந்து அமேசான் நிறுவனமும் 10 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிரபல சமூக வலைத்தளமான  "டுவிட்டரை" வாங்கிய உலக பணக்காரர் எலன் மாஸ்க், தேவையற்ற செலவை குறைக்கவும், வருமானத்தை அதிகரிக்கவும் டுவிட்டர் நிறுவனத்தில் அதிரடியாக ஆட்குறைப்பு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறார். இதேபோல் வாட்ஸாப் மற்றும் பேஸ்புக் நிறுவனங்ககளின் தாய் நிறுவனம் மெட்டா நிறுவனத்தின் செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் , நிறுவனத்தின் ஊழியர்கள் 11,000 பேரை பணி நீக்கம் செய்தார். அதாவது மொத்த பணியாளர்களின் 13% பேரை பணி நீக்கம் செய்தார். 

Elon musk

இந்நிலையில், டுவிட்டர் மற்றும் மெட்டா நிறுவனத்தை தொடர்ந்து அமேசான் நிறுவனமும் 10 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த அமேசான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வாரத்தில்  10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யக்கூடும் என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.உலகளவில் 1.6 மில்லியனுக்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்ட அமேசான் நிறுவனத்திற்கு, அதன் பணியாளர்களில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே இழப்பதாக இருக்கும்.பணிநீக்கம் கவனம் செலுத்தப்படும் பிரிவுகள் அமேசானின் சாதனங்கள் பிரிவு, குரல் உதவியாளர் அலெக்சா மற்றும் அதன் சில்லறை மற்றும் மனித வளப் பிரிவு ஆகியவற்றில் பணிநீக்கங்கள் கவனம் செலுத்தும் என்று கூறப்படுகிறது.