10,000 ஊழியர்களின் வேலை பறிபோனது - சொன்னதை செய்து காட்டிய அமேசான்

 
amazon

ஏற்கனவே அறிவித்தபடி அமேசான் நிறுவனம் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

பிரபல சமூக வலைதளமான டுவிட்டரை வாங்கிய உலக பணக்காரர் எலன் மாஸ்க், தேவையற்ற செலவை குறைக்கவும், வருமானத்தை அதிகரிக்கவும் டுவிட்டர் நிறுவனத்தில் அதிரடியாக ஆட்குறைப்பு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறார். இதேபோல் வாட்ஸாப் மற்றும் பேஸ்புக் நிறுவனங்ககளின் தாய் நிறுவனம் மெட்டா நிறுவனத்தின் செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் , நிறுவனத்தின் ஊழியர்கள் 11,000 பேரை பணி நீக்கம் செய்தார். அதாவது மொத்த பணியாளர்களின் 13% பேரை பணி நீக்கம் செய்தார். 

இந்நிலையில், டுவிட்டர் மற்றும் மெட்டா நிறுவனத்தை தொடர்ந்து அமேசான் நிறுவனமும் 10 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.  பொருளாதார சூழல் காரணமாக அமேசான் நிறுவனம் உலகம் முழுவதும் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக தெரிவித்து இருந்தது. இது மொத்த பணியாளர்களில் 3 சதவீதமாகும். இந்நிலையில், தற்போது 10 ஆயிரம் பேரை நீக்கி அதை உறுதிப்படுத்தியது. பணியில் இருந்து நீக்கியது தொடர்பாக ஊழியர்களுக்கு இ-மெயில் மூலம் அந்த நிறுவனம் தகவலையும் அனுப்பி உள்ளது.