பூமியை நோக்கி 29,000 கி.மீ. வேகத்தில் வரும் விண்கல் - விஞ்ஞானிகள் கூறுவது என்ன?

 
vinkal

சுமார் நூறு அடி விட்டம் கொண்ட விண்கல் ஒன்று 29 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. 

 சுமார் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் விழுந்த விண்கற்களால் அன்றைய டைனோசர் இனம் அழிந்து, மலைகள் வெடித்து சிதறியதுடன், சுனாமி போன்ற பேரழிவுகளை பூமி சந்தித்தது.இந்நிலையில், சுமார் நூறு அடி விட்டம் கொண்ட விண்கல் ஒன்று பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். யூஎன்.5 என பெயரிடப்பட்டுள்ள அந்த விண்கல் மணிக்கு 29 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் வந்துகொண்டிருப்பதாகவும் அந்த விண்கல் இன்று பூமியின் புவி வட்ட பாதையை 8 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்து செல்லும் எனவும் தெரிவித்துள்ளன. விண்வெளியில் சுற்றித்திரியும் விண்கற்கள் பூமியின் மீது மோதி பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க அந்த விண்கல் மீது விண்கலத்தை மோதி பாதி வழியிலேயே திசை திருப்பும் முயற்சியில் நாசா சமீபத்தில் வெற்றி கண்டது குறிப்பிடதக்கது.