43 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் மரண தண்டனை!

 

43 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் மரண தண்டனை!

இலங்கையில் கொடும்குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரணத்தை அளிக்கும் சட்டம் நடைமுறையில் இருந்தாலும் கடந்த 43 ஆண்டுகளாக இதுவரை யாருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதில்லை. கருணை மனுக்களின் அடிப்படையில் பலரது மரண தண்டனையை முன்னாள் அதிபர்கள் ஆயுள் தண்டனையாக குறைத்திருக்கின்றனர்.

இலங்கையில் கொடும்குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரணத்தை அளிக்கும் சட்டம் நடைமுறையில் இருந்தாலும் கடந்த 43 ஆண்டுகளாக இதுவரை யாருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதில்லை. கருணை மனுக்களின் அடிப்படையில் பலரது மரண தண்டனையை முன்னாள் அதிபர்கள் ஆயுள் தண்டனையாக குறைத்திருக்கின்றனர். இந்நிலையில், ஜூன் 23 முதல் ஜூலை முதல் தேதி வரை ஒருவார காலத்துக்கு போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட, 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் கோப்புகளில், தற்போது அதிபர் மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளார்.

Maithripala Sirisena

இலங்கையில் 1976ஆம் ஆண்டு ஜுன் மாதம் 23ஆம் தேதிக்கு பின்னர் இதுவரை மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. கொடும்குற்றம் இழைத்தவர்களுக்கு நீதிமன்றங்கள் மரண தண்டனை விதித்தப்போதும், அதற்கு அதிபர்கள் ஒப்புக்கொண்டதில்லை. இந்நிலையில், 43 வருடங்களுக்கு பின்னர், மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளதாக‌ அதிபர் மைத்திரிபால சிறிசேன செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.