பள்ளிக்கூடத்தில் மாணவன் வெட்டிக்கொலை – சக மாணவன் வெறிச்செயல்

 

பள்ளிக்கூடத்தில் மாணவன் வெட்டிக்கொலை – சக மாணவன் வெறிச்செயல்

13 வயது மாணவன் ஒருவன் சக மாணவனால் பள்ளி வளாகத்திற்குள் கோடரியால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பள்ளிக்கூடத்தில் மாணவன் வெட்டிக்கொலை – சக மாணவன் வெறிச்செயல்

சிங்கப்பூரில் பிரபலமான பள்ளி தான் ரிவர் வேலி உயர்நிலைப்பள்ளி. இந்த பள்ளிக்கூடத்தில் நேற்று முன்தினம் வகுப்பறையை விட்டு வெளியே வந்த மாணவர்கள் கழிவறைக்கு சென்றுள்ளனர். அங்கே மாணவன் ஒருவன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு சத்தம் போட்டுக் கொண்டு ஓடி வந்து ஆசிரியர்களிடம் கூறியிருக்கிறார்கள்.

பள்ளியின் ஆசிரியர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து ரத்தவெள்ளத்தில் கிடந்த மாணவனை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பள்ளிக்கூடத்தில் மாணவன் வெட்டிக்கொலை – சக மாணவன் வெறிச்செயல்

மாணவனின் அருகில் ரத்தம் படிந்த நிலையில் கிடந்தது டைரியை போலீசார் கைப்பற்றினர். 13 வயது மாணவனை பள்ளி வளாகத்திற்குள்ளேயே கோடரியால் வெட்டிக் கொலை செய்தது யார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது மாணவனுக்கு எதிரிகள் யாரும் இருந்தார்களா? பள்ளிக்கூடத்தில் அவருக்கு யாரும் எதிரிகள் உண்டா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வந்த போது அதே பள்ளியில் படித்து வரும் 16 வயது மாணவன் சிக்கினான்.

பள்ளிக்கூடத்தில் மாணவன் வெட்டிக்கொலை – சக மாணவன் வெறிச்செயல்

அவனிடம் துருவித்துருவி போலீசார் விசாரித்ததில், தானே அந்த மாணவனை கோடரியால் வெட்டிக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறான். இந்த அளவுக்கு வெறித்தனமாக மாணவனை வெட்டி கொலை செய்யும் அளவிற்கு என்ன நடந்தது என்று அவனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உலகத்திலேயே கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் குறைவாக நடக்கும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று என்ற பேச்சு இருக்கிறது. அப்படி இருக்கும் நிலையில் சிங்கப்பூரில் உள்ள ஒரு பிரபல பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவன் சக மாணவனால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சிங்கப்பூரை மட்டுமல்லாது உலகமெங்கிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.