28 மணி நேரத்தில் 10 மாடி கட்டிடம் கட்டியது எப்படி? வைரலாகும் வீடியோ

28 மணி நேரத்தில் 10 மாடி கட்டிடம் கட்டியது எப்படி? வைரலாகும் வீடியோ

28 மணி 45 நிமிடத்தில் 10 மாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சீனாவில் பிராட் குழுமம் நிறுவனம் இந்த கட்டிடத்தை கட்டி முடித்திருக்கிறது.

28 மணி நேரத்தில் 10 மாடி கட்டிடம் கட்டியது எப்படி? வைரலாகும் வீடியோ

28 மணி நேரத்தில் 10 மாடி கட்டிடம் கட்டியது எப்படி? என்பது குறித்து அந்த நிறுவனம் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. பார்ப்போரை கவர்ந்துள்ள இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

10 மாடி கட்டித்தினை 28 மணி நேரத்தில் கட்டியதோடு அல்லாமல், அத்தனை தளங்களுக்கும் மின் இணைப்பு, குடிநீர் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

28 மணி நேரத்தில் 10 மாடி கட்டிடம் கட்டியது எப்படி? வைரலாகும் வீடியோ

ராட்சச கிரேன்கள் உதவி கொண்டு கட்டுமான பணிகளை தொடங்குகின்றனர். சுவர்கள், ஜன்னல்கள் ஆகியவற்றை அடுக்கி, நட்டு போல்டுகள் போட்டு இறுக்கி விடுகின்றனர். 10 மாடிகளையும் இப்படி துரிதமாக செயல்பட்டு 28 மணி நேரத்திற்குள் முடித்து விடுகின்றனர். 28மணி 45 நிமிடத்திற்குள்ளேயே கட்டிடத்தை கட்டி முடித்தது மட்டுமல்லாமல், குடிநீர், மின்சார சப்ளையும் கொடுத்து அசத்துகின்றனர்.

28 மணி நேரத்தில் 10 மாடி கட்டிடம் கட்டியது எப்படி? வைரலாகும் வீடியோ

சாங்ஷா அடிப்படையிலான டெவலப்பர்கள் ஒரு தொழிற்சாலையில் முன்கூட்டியே தயாரிக்கப்பட்டு, அவை எடுத்து வரப்பட்டு பிட்டிங் செய்யப்படுவதான் என்றாலும், சரியான திட்டமிடல் இருந்தால்தான் இத்தனை குறுகிய கால அவகாசத்தில் 10 மாடிகளை கட்டி முடிக்கப்படும் என்று தெரிகிறது.

பிராட் குழுமம் இதற்கு முன்னதாக 2015 ஆம் ஆண்டில், லிவிங் பில்டிங் சிஸ்டத்தை பயன்படுத்தி 57 மாடி கோபுரத்தை 19 நாட்களுக்குள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.