மகனே.. உன்னை வீட்டிற்கு அழைத்துச்செல்ல அப்பா வருகிறேன்…பைக்கில் பேனர் கட்டிக்கொண்டு 24 ஆண்டுகள் 20 மாநிலங்களில் அலைந்த தந்தை

மகனே.. உன்னை வீட்டிற்கு அழைத்துச்செல்ல அப்பா வருகிறேன்…பைக்கில் பேனர் கட்டிக்கொண்டு 24 ஆண்டுகள் 20 மாநிலங்களில் அலைந்த தந்தை

மகனே.. உன்னை வீட்டிற்கு அழைத்துச்செல்ல அப்பா வருகிறேன்.. என்று பைக்கில் பேனர் கட்டிக்கொண்டு, பிட் நோட்டீஸ் மூலம் விளம்பரபடுத்தி நாடு முழுவதும் 24 ஆண்டுகள் அலைந்து 12 வயதில் கடத்தப்பட்ட மகனை கண்டுபிடித்திருக்கிறார். தன் மகனை கண்டுபிடிக்கவே அவர் வாழ்வின் பெரும்பகுதியையும், சேர்த்து வைத்த பணத்தையும் செலவழித்திருக்கிறார்.

மகனே.. உன்னை வீட்டிற்கு அழைத்துச்செல்ல அப்பா வருகிறேன்…பைக்கில் பேனர் கட்டிக்கொண்டு 24 ஆண்டுகள் 20 மாநிலங்களில் அலைந்த தந்தை

சீனாவில் ஷண்டோங் Shandong மாநிலத்தை சேர்ந்த குவோ கேங்டாங்(Guo Gangtang)விவசாயி. இவரின் மகன் 1997ல் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்டான்.

மகனை ஊர் முழுவதும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. பாச மகனை பிரிந்து குவோ கேங்டாங்கினால் இருக்க முடியவில்லை. அதனால் சேமித்து வைத்த பணத்தை எடுத்துக்கொண்டு, மகனின் குழந்தை படத்தை அச்சிட்டு, ’மகனே.. உன்னை வீட்டிற்கு அழைத்துச்செல்ல அப்பா வருகிறேன்.. ’என்று பைக்கில் பேனர் கட்டிக்கொண்டு 1997ல் புறப்பட்டார்.

மகனே.. உன்னை வீட்டிற்கு அழைத்துச்செல்ல அப்பா வருகிறேன்…பைக்கில் பேனர் கட்டிக்கொண்டு 24 ஆண்டுகள் 20 மாநிலங்களில் அலைந்த தந்தை

ஒவ்வொரு மாநிலமாக சுற்றி 20 மாநிலங்களில் தேடி அலைந்திருக்கிறார். போகும் இடமெல்லாம் பிட் நோட்டீஸ் கொடுத்தும் தேடியிருக்கிறார்.

பல நாட்கள் அவர் பாலத்திற்கு கீழே தங்கியிருக்கிறார். 24 வருட தேடலில் நிறைய விபத்துகளை சந்தித்திருக்கிறார். 10 பைக்குகள் சேதமாகியிருக்கிறது. கொள்ளையர்களிடம் இருந்து போராடி போராடி தப்பித்திருக்கிறார்.

மகனே.. உன்னை வீட்டிற்கு அழைத்துச்செல்ல அப்பா வருகிறேன்…பைக்கில் பேனர் கட்டிக்கொண்டு 24 ஆண்டுகள் 20 மாநிலங்களில் அலைந்த தந்தை

குவோவின் இந்த பாசப்போராட்டம் நாடு முழுவதும் அறியப்பட்டதால் சீனாவில் முன்னணி நடிகர் ஒருவர் நடிப்பில் குவாவின் பாசப்போராட்ட கதை திரைப்படமாக வெளிவந்தது.

குவாவின் இந்த போராட்டத்தினை அடுத்து காவல்துறை தீவிர முயற்சி எடுத்து குவாவின் மகனை மீட்டு கொடுத்திருக்கிறது. மரபணு சோதனைகள் மூலம் குவாவின் மகனை அடையாளம் கண்டுள்ளனர் காவல்துறையினர். மகனை ஒரு பெண் கடத்தி பக்கத்து மாநிலம் ஹீனானில் (Henan) விற்றுள்ளது தெரிவந்தது.

மகனே.. உன்னை வீட்டிற்கு அழைத்துச்செல்ல அப்பா வருகிறேன்…பைக்கில் பேனர் கட்டிக்கொண்டு 24 ஆண்டுகள் 20 மாநிலங்களில் அலைந்த தந்தை

வாழ்நாளின் பெரும்பகுதியையும் சேர்த்து வைத்த பணத்தையும் செலவழித்து மகனை கண்ட மகிழ்ச்சியில் கதறியிருக்கிறார் குவான். மகனும் தந்தையை கட்டிப்பிடித்து கதறியிருக்கிறார்.

இந்த நெகிழ்ச்சி சம்பவம் வீடியோவாக இணையங்களில் வைரலாகி வருகிறது.