பாகிஸ்தானில் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு - 22 பேர் உயிரிழப்பு!
பாகிஸ்தானின் குவெட்டாவில் உள்ள ரயில் நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தானில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் இன்று குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ரயில் நிலையத்தில் கூடியிருந்த பயணிகள் 22 பேர் உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களில் சிலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல் தற்கொலைப் படை தாக்குதலாக இருக்க கூடும் என குவெட்டாவின் எஸ்.எஸ்.பி., முகமது பலோச் கூறியுள்ளார். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், இதுவரை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் முகமது பலோச் கூறியுள்ளார். பயங்கரவாதிகளின் புகலிடமாக விளங்கும் பாகிஸ்தானில் அவ்வபோது இதுபோன்ற தாக்குதள் நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது


