2 ராணுவ ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்து - 10 பேர் பலி

 
tn

மலேசியாவில் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்.

 tn

மலேசியா நாட்டின் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது.  ராணுவ பயிற்சியின் போது ஹெலிகாப்டர்கள் இரண்டும் நேருக்கு நேர் மோதியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து ஹெலிகாப்டர்களின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அடுத்த நொடியை கீழே விழுந்து நொறுங்கியதாக  கூறப்படுகிறது.

tn

கோலாலம்பூரில் நடுவானில் ஹெலிகாப்டர் பயிற்சி போது இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிகிறது. இதில் பத்து பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.  மலேசியாவில் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.