போலீஸ் முகத்தில் காரி துப்பிய இளம்பெண்: வைரலாகும் வீடியோ
Nov 6, 2020, 19:41 IST1604671862000
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளால் அதிர்ச்சி அடைந்த டிரம்ப், தேர்தல் முடிவுகளை நிறுத்தக்கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மான்ஹேட்டனில் நடந்த போராட்டத்தில் தேவினா சிங்(24) என்ற இளம்பெண், தங்களை தடுத்தி நிறுத்திய காவல் அதிகாரியை தரக்குறைவாக பேசிக்கொண்டே, அவரின் முகத்தில் காரித்துப்பினார்.
இதனால் ஆவேசம் அடைந்த அந்த அதிகாரி அந்தப்பெண்ணை தாக்கினார். பிற அதிகாரிகளும் தாக்கியதில் அப்பெண் கீழே விழுந்தார். கீழே விழுந்து கிடந்தவரை கைது செய்து இழுத்து சென்றனர்.
இந்த வீடியோ இணையங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த இளம்பெண்ணை கடுமையாக தாக்கி கீழே தள்ளியதற்காக பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.