16 வயது சிறுமியிடம் தகாத செயலில் ஈடுபட்ட மனித ரோபோ
ஜெர்மனியில் பட்டப்பகலில் 16 வயது சிறுமியிடம் தகாத செயலில் ஈடுபட்ட மனித ரோபோவின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனியின் கொலோன் நகரில் உள்ள ஒரு துரித உணவகத்திற்கு வெளியே, 16 வயது சிறுமி ஒருவர் ரோபோவால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம், படமாக்கப்பட்டு சமூக ஊடகங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைப் பதிவு செய்ததாகச் சந்தேகிக்கப்படும் ரோபோவின் உரிமையாளரான 16 வயது சிறுவனும், அவரது நண்பரும் போலீஸில் சிக்கினர். அவர்களிடமிருந்து ரோபோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் மத்திய கொலோனில் உள்ள பரபரப்பான ஹோஹென்சோலெர்ன்ரிங் தெருவில் நடந்துள்ளது. அந்தச் சிறுமி தனது நண்பர்களுடன் ஒரு துரித உணவு விடுதிக்கு வெளியே நின்றுகொண்டிருந்தபோது, சுமார் 1.2 மீட்டர் உயரம் கொண்ட சிவப்பு மற்றும் தங்க நிற ரோபோ ஒன்று அவளைப் பின்னாலிருந்து தொட்டதாக கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த நேரத்தில் அந்த ரோபோ எவ்வாறு இயங்கியது மற்றும் அதன் இயக்கங்கள் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்பட்டதா என்பதை காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். மேலும், அந்தப் பெண்ணைத் துன்புறுத்தும் நோக்கில் அந்த இயந்திரம் வேண்டுமென்றே கையாளப்பட்டதா என்பது குறித்தும் புலனாய்வாளர்கள் விசாரித்து வருகின்றனர்.

