நேபாள் விமான விபத்து - 16 பேர் சடலமாக மீட்பு! மீட்பு பணிகள் தீவிரம்

 
Nepal Aircraft

நேபாள நாட்டின் பொக்காரோ விமான நிலையத்தில், 72 பேருடன் வந்த விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 16 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 

நேபாள நாட்டின் காத்மண்டுவில் இருந்து பொக்காரோ விமான நிலையம் நோக்கி 68 பயணிகளுடன் யேட்டி விமானம் வந்துகொண்டிருந்தது.. இந்நிலையில் விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விமானம் பொக்காரோ விமான நிலையத்தில் ஓடுதளத்தை விட்டு நகர்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் அந்த விமான தீப்பிடித்து எரிந்தது. அந்த விமானத்தில் 68 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் பயணிகள் பயணம் செய்த நிலையில், அதில் 16 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் விமானத்தில் சிக்கிக்கொண்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இதனிடையே விபத்துக்குள்ளான பொக்காரோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில், அங்கு மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 72 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் நேபாள நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீட்பு பணிகளை தீவிரப்படுத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.