பிரேசில் நாட்டில் சிறிய ரக விமானம் விபத்து - 12 பேர் பலி

 
accident

பிரேசில் நாட்டில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

பிரேசில் நாட்டில் இருந்து புறப்பட்ட ஒரு சிறிய ரக விமானத்தில் 9 பெரியவர்கள், ஒரு கைக்குழந்தை, விமானி மற்றும் துணை விமான என மொத்தம் 12 பேர் பயணித்தனர். அந்த விமானம் அமேசான் காட்டிற்கு மேலே பறந்துகொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. விமான நிலைய அதிகாரிகள் நீண்ட நேரமாக அந்த விமானத்தை தொடர்புகொள்ள முயன்றும் அந்த விமானத்தை தொடர்புகொள்ள முடியவில்லை.

இதனையடுத்து அந்த விமானம் அமேசான் காட்டில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என சந்தேகித்த விமான நிலைய அதிகாரிகள், உடனடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதில் அந்த விமானம் அமேசான் காட்டிற்குள் விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு சென்ற மீட்பு குழுவினர் இறந்தவர்களின் உடலை மீட்டனர்.