மண் எனும் மகத்துவோம்!

மண் தானே என சாதாரணமாக நினைப்போம். உதாரணத்திற்கு ஏதாவது ஒரு வெற்றிடம் என்றால், அந்த இடத்தில் ஒரு மண்ணும் இல்ல… என சொல்வதுண்டு. ஆனால் ஒரு பிடி மண் எடுக்க 1000 கோடி வரை செலவழித்துள்ளது அமெரிக்கா. ஆனால் பூமியிலுள்ள மண் அல்ல. நிலவிலுள்ள மண்! இப்படி பூமியில் மட்டுமின்றி பிற கோள்களிலும் மண் உள்ளது. அந்த மண்ணின் மகத்துவத்தை பார்க்கலாம்…

உலகில் மழை, வெப்பம், காற்று ஆகிய காரணிகளின் அளவைக் கொண்டு மண்ணின் தன்மையும், இயல்பும் மாறுபடும். அதன்படி மண் 12 வகைப்படும். அதில் ஏறத்தாழ அனைத்து வகையான மண் படிமங்களும் இந்தியாவில் காணப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவில் ஒரு வருடத்திற்கு 1000 செ.மீ மழைப் பொழியும் இடமாக சிரப்புஞ்சியும், மிகவும் வறண்ட இடமாக ராஜஸ்தானில் உள்ள தார் பாலை வனமும் உள்ளது. எனவே இந்தியாவில் அனைத்து விதமான பயிர்களும் பயிரிடுவதற்கான சூழலும் மண் வளமும் உள்ளது. ஒரு கைப்பிடி மண் உருவாக ஏறக்குறைய 300-1000 வருட காலம் ஆகலாம் என்கிற்து ஆய்வுகள்.
தமிழகத்தில் உள்ள மண் வகைகள்:
1. செம்மண்
2. கரிசல் மண்
3. செம்பொறை மண்
4. கடற்கரை மணல்

மண்ணடியில் வாழும் உயிரிகள்:

நைட்ரஜனை நிலைநிறுத்த உதவும் பாக்டீரியாக்கள்
மண்புழு
கரையான்
வளமான மண் என்பது 6 முதல் 6.8 வரை கார அமில தன்மையை கொண்டிருக்க வேண்டும், மண்ணில் பயிரிடப்படும் பயிரை பொருத்து மண்ணின் கார அமில தன்மை மாறுபடும்; அதாவது கிழங்கு வகையான உருழைக்கிழங்கு பயிரிட மண்ணின் கார அமில தன்மை 4.5 முதல் 5 வரை இருந்தாலே போதுமானதாகும்.

மண்ணில் நிறைந்துள்ள தாதுக்கள்:
நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ், சுண்ணாம்பு, மக்னீசியம், கந்தகம், இரும்பு, போரான், தாமிரம், துத்தநாகம், குளோரின், மேங்கனிஸ், மாலிப்டினம்
அசுர வேகத்தில் வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தாலும், ரசாயன உரங்களாளும், தொழில் பெருக்கத்தாலும் மண்ணின் வளம் சீரழிந்து அதன் இயல்புத்தன்மை திரிந்து வருகிறது. முறையான இயற்கை உரங்களை இடுவதன் மூலம் மண்ணின் வளத்தை அப்படியே வருங்கால சந்ததியினருக்கு வழங்கலாம்..