Home விளையாட்டு கிரிக்கெட் மழையால் வந்த சோதனை… டிராவை நோக்கி நகரும் டெஸ்ட் பைனல் - ரசிகர்கள் வேதனை!

மழையால் வந்த சோதனை… டிராவை நோக்கி நகரும் டெஸ்ட் பைனல் – ரசிகர்கள் வேதனை!

50 ஓவர் உலகக்கோப்பைக்கு இணையாகப் பேசப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சப்பையாக முடிவது உள்ளபடியே கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐசிசி முதல் முறையாக டெஸ்ட் போட்டிக்கென்று தனி முக்கியவத்துவம் கொடுத்து இந்தத் தொடரை உருவாக்கியது. ஆனால் கொரோனாவும் மழையும் மொத்தத்தையும் மாற்றியமைத்துவிட்டது. கொரோனாவுக்கு என்ன சம்பந்தம். இந்தத் தொடர் 2019ஆம் ஆண்டு தொடங்கியது.

மழையால் வந்த சோதனை… டிராவை நோக்கி நகரும் டெஸ்ட் பைனல் - ரசிகர்கள் வேதனை!
மழையால் வந்த சோதனை… டிராவை நோக்கி நகரும் டெஸ்ட் பைனல் - ரசிகர்கள் வேதனை!

கொரொனா தாக்கத்தால் போட்டிகள் நடத்தமுடியாமல் போனது. இதையடுத்து ஐசிசி உயர்மட்ட குழு கூடி புதிய விதிமுறைகளை வகுத்தது. அதன்படி, 85 சதவிகித போட்டிகளை மட்டுமே நடத்த முடியும் என்பதால், கொரோனாவால் நடத்தமுடியாமல் போன தொடர்களுக்கு டிராவுக்கான புள்ளிகள் வழங்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது. இப்படி ஏற்கெனவே பல்வேறு நெருக்கடிகளைக் கடந்தே இறுதிப் போட்டிக்கு இந்தியாவும் நியூஸிலாந்தும் தகுதிபெற்றன. இப்போது மழை அந்த வேலையைச் சிறப்பாகச் செய்திருக்கிறது. ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பை தண்ணீர் ஊற்றி அணைத்திருக்கிறது.

பெரியளவில் மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் முழுவதுமே ரத்து செய்யப்பட்டது. இரண்டாம் நாள் கொஞ்சம் கருணை காட்டியதால் இந்திய அணியால் ஓரளவு பேட்டிங் ஆட முடிந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித், கில் ஆகியோரும் பில்லர் புஜராவும் சீக்கிரமே வெளியேறினாலும் கேப்டன் கோலியும் ரஹானேவும் டீசண்டாக ஆடி வலுவான நிலையில் வைத்திருந்தனர். வானிலை மீண்டும் சோதித்தால் 2ஆம் நாளில் 20க்கும் மேற்பட்ட ஓவர்கள் வீசப்படவில்லை. அதேபோல 3ஆம் நாளும் தாமதமாகவே தொடங்கியது. ஃபிட்ச் வேகப்பந்துவீச்சுக்கு சாதகாமாகியதால் இந்திய வீரர்கள் வரிசையாக நடையைக் கட்டினர்.

Image

மேற்கொண்டு கொஞ்ச ஓவர்கள் மட்டுமே நியூஸிலாந்து அணி ஆடியது. அந்த அணி 101 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் அதே சோதனை தான். அதற்குப் பிறகு அனைவரும் பெவிலியன் திரும்பினர். நேற்று மழை கொஞ்சம் கூட கருணை காட்டவில்லை. அதனால் நேற்றைய நாளும் ஒரு பந்து கூட வீசப்படவில்லை. ஆகவே ஆட்டத்தின் முடிவு இது தான் என ஒரு முடிவுக்கு வந்துவிட்டனர் அனைவரும். ஆட்டம் டிரா ஆகும் அவ்வளவு தான்.

Image

அப்படி டிரா ஆனால் இரு அணிகளுமே வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு கோப்பை பகிர்ந்தளிக்கப்படும். இச்சூழலில் சம்பிரதாய முறையில் இன்று 5ஆம் நாள் ஆட்டம் தொடங்கியுள்ளது. இதுவும் வழக்கம் போல தாமதம் தான். தற்போது விட்ட இடத்திலிருந்து ஆடிவரும் நியூஸிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது.

மழையால் வந்த சோதனை… டிராவை நோக்கி நகரும் டெஸ்ட் பைனல் - ரசிகர்கள் வேதனை!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

டிஎன்பிஎல்: 2வது ஆட்டத்தில் கோவையை வீழ்த்திய திண்டுக்கல்

நடப்பு டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 9வது போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன் அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

டிஎன்பிஎல்: திருச்சி அணி த்ரில் வெற்றி

5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 7வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள்...

மீண்டும் களைகட்டவுள்ள ஐபிஎல் திருவிழா! அட்டவணை வெளியீடு

ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான ஐபிஎல்...

இந்தியா- இலங்கை டி20 தொடர்: அசத்திய சூர்ய குமார் யாதவ்!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை...
- Advertisment -
TopTamilNews