உலக வெறிநோய் தினம்: இலவச தடுப்பூசி முகாம்

உலக வெறிநோய் தினம்: இலவச தடுப்பூசி முகாம்

உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஈரோட்டில் வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது . இதில் தங்கள் வீடுகளில் வளர்த்து வந்த நாய்களை கொண்டு வந்து பொதுமக்கள் இலவச தடுப்பூசி போட்டனர்.

உலக வெறிநோய் தினம்: இலவச தடுப்பூசி முகாம்

இந்த இலவச வெறிநோய் தடுப்பு முகாமை தொடங்கி வைத்து பின் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் கதிரவன் , ‘’கிசான் முறைகேடு தொடர்பாக ஈரோடு மாவட்டத்தில் 570 விவசாயிகளிடம் இருந்து 40 லட்ச ரூபாய் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் , இன்னும் 20 லட்சம் மட்டுமே திரும்ப பெற வேண்டி உள்ளதாகவும் தெரிவித்தார் .

உலக வெறிநோய் தினம்: இலவச தடுப்பூசி முகாம்

இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் , இந்த மோசடி தொடர்பாக இதுவரை யாரையும் கைது செய்யப்படவில்லை என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

உலக வெறிநோய் தினம்: இலவச தடுப்பூசி முகாம்

மேலும் ஈரோடு மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களிடமிருந்து இதுவரை 7 லட்ச ரூபாய் அபதாரம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் , இது மேலும் தீவிரப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.