நெருங்கும் பண்டிகைக் காலம்: எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!

 

நெருங்கும் பண்டிகைக் காலம்: எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!

கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் பண்டிகை காலத்தில் அதிகரிக்க வாய்பிருப்பதால், மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக நாடுகளை கொரோனா வைரஸ் உலுக்கி எடுத்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பாதிப்பு குறைந்து வருவதாக தெரிகிறது. சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவில் நாளொன்றுக்கு 70 ஆயிரம் வரை பாதிப்பு இருந்த வந்தது. ஆனால் தற்போது 50 ஆயிரத்துக்கும் குறைவாகவே கொரோனா பரவல் இருக்கிறது. இந்தியாவை போலவே, வங்க தேசத்திலும் கொரோனா பாதிப்பு குறைந்திருக்கிறது.

நெருங்கும் பண்டிகைக் காலம்: எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!

இந்தியா மற்றும் வங்க தேசத்தில் பாதிப்பு குறைவதால், தென் கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா தாக்கம் குறைவாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால், கொரோனா குறைகிறதே என அலட்சியமாக இருக்கக் கூடாது என்றும் பண்டிகை காலங்களில் பாதிப்பு பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெருங்கும் பண்டிகைக் காலம்: எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!

இது குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் அதிகாரி, ‘கடந்த சில நாட்களாக பாதிப்பு குறைந்து வருவதை பார்த்து மன நிறைவு அடையக்கூடாது. சரியான நேரத்தில் கொரோனாவை கண்டுபிடித்து, பரிசோதனை செய்து, உரிய சிகிச்சை அளித்தாலும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை உடனே தனிமைப்படுத்தியதன் விளைவாகவும் தற்போது பாதிப்பு குறைவாக இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிகள் தொடர வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.