கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி – மூவர் படுகாயம்

 

கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி – மூவர் படுகாயம்

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே சென்ட்ரிங் பணியின்போது மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த மேலும், 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திண்டுக்கல் அடுத்த அழகர் சிங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த நந்தகுமார் என்பவர், தனக்கு நிலத்தில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த கட்டிடத்தின் 2-வது மாடியில் கான்கிரீட் போடுவதற்காக நேற்று சென்ட்ரிங் வேலை நடைபெற்றது. இந்த பணியில் முள்ளிப்பாடியை சேர்ந்த ரவி, அவரது மகன் மணி மற்றும் சுரேஷ், அத்துடன் நந்தவனபட்டியை சேர்ந்த கோபி ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி – மூவர் படுகாயம்

அப்போது கட்டுமான பணிக்காக சுரேஷ் கம்பியை எடுத்தபோது, எதிர்பாராத விதமாக வீட்டின் அருகே சென்ற மும்முனை மினசார மின்கம்பியின் மீது உரசியது. இதனை கண்டு சுரேசை காப்பற்ற முயன்ற ரவி மீது மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மின்சாரம் பாய்ந்ததில் சுரேஷ், மணி மற்றும் கோபி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், மூவரையும் உடனடியாக மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.