சாலையில் கிடந்த தங்க மோதிரத்தை, போலீசில் ஒப்படைத்த தொழிலாளி

 

சாலையில் கிடந்த தங்க மோதிரத்தை, போலீசில் ஒப்படைத்த தொழிலாளி

திருப்பத்தூர்

வாணியம்பாடியில் சாலையில் கேட்பாரற்று கிடந்த தங்க மோதிரத்தை, தொழிலாளி ஒருவர் போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வாணியம்பாடி அடுத்த பள்ளிப்பட்டு கூட்டுரோடு பகுதியில் இன்று காலை அடையாளம் தெரியாத நபர், தங்க மோதிரத்தை தவற விட்டு சென்றதாக கூறப்படுகிது. இந்த நிலையில் சாலையில் கேட்பாரற்று கிடந்த மோதிரத்தை அவ்வழியாக சென்ற கூலி தொழிலாளி ராஜாமணி என்பவர் கண்டெடுத்தார். சுமார் அரை சவரன் அளவிலான அந்த மோதிரத்தை உரியவரிடம் ஒப்படைக்க எண்ணிய ராஜாமணி அதனை வாணியம்பாடி கிராமிய காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தார்.

சாலையில் கிடந்த தங்க மோதிரத்தை, போலீசில் ஒப்படைத்த தொழிலாளி

சுயநலம் கருதாமல் சாலையில் கண்டெடுத்த மோதிரத்தை உரியவரிடம் ஒப்படைக்க எண்ணிய ராஜாமணிக்கு, உதவி ஆய்வாளர் குணசேகர் மற்றும் காவலர்கள் பாராட்டு தெரிவித்தனர். மேலும், அந்த மோதிரத்தை தவறிவிட்ட நபர் குறித்தும் அவர்கள் விசாரித்து வருகின்றனர்.