‘அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்’ வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி!

 

‘அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்’ வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி!

அரசு அலுவலகங்கள் ஜனவரி முதல் வாரத்திற்கு 5 நாட்கள் செயல்படும் என தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் அரசு அலுவலகங்கள், மால்கள், தியேட்டர்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இதனைத்தொடர்ந்து முதற்கட்டமாக அளிக்கப்பட்ட தளர்வுகளின் போது அரசு அலுவலகங்கள் செயல்பட முதல்வர் அனுமதி அளித்தார். மேலும், விடுமுறை நாட்களை ஈடுகட்ட வாரத்தில் 6 நாட்கள் பணிபுரிய வேண்டும் என உத்தரவிட்டார். அதன் படி தற்போது வரை அரசு அலுவலகங்கள் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்பட்டு வருகின்றன.

‘அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்’ வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி!

இந்த நிலையில், வரும் ஜனவரி முதல் வாரத்தில் 5 நாட்கள் அரசு அலுவலகங்கள் செயல்படும் என தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவித்துள்ளார். அதாவது ஜனவரி 1ம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற 5 நாட்கள் அலுவலகம் செயல்படும் என அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.