மருத்துவர்களின் பணிச் சுமையைக் குறைக்க சுழற்சி முறையில் பணி! – சீமான் வலியுறுத்தல்

மருத்துவர்களின் பணிச் சுமையைக் குறைக்க சுழற்சி முறையில் பணி! – சீமான் வலியுறுத்தல்

ஸ்டான்லி மருத்துவமனை மாடியில் இருந்து இளம் மருத்துவர் பணிச் சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டது பற்றி தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும், மருத்துவர்களின் பணிச் சுமையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள ட்வீடில், “சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை மாடியிலிருந்து

மருத்துவர்களின் பணிச் சுமையைக் குறைக்க சுழற்சி முறையில் பணி! – சீமான் வலியுறுத்தல்

குதித்து உடுமலைப்பேட்டையைப் சேர்ந்த இளம் மருத்துவர் கண்ணன் தற்கொலை செய்துகொண்ட செய்தி கேட்டு பேரதிர்ச்சியும், பெருத்த வேதனையுமடைந்தேன். குடும்பத்தினருக்கும், சக மருத்துவர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

http://

மருத்துவர் கண்ணன் தற்கொலை குறித்து உரிய விசாரணை வேண்டும்.

மருத்துவர்களின் பணிச் சுமையைக் குறைக்க சுழற்சி முறையில் பணி! – சீமான் வலியுறுத்தல்

கொரோனா பிரிவில் பணியாற்றியவர் அதீத மன அழுத்தத்தினால் தற்கொலை செய்துகொண்டார் என்பதையும் கவனத்திலெடுத்து மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களுக்கு உரிய ஓய்வும், சுழற்சிமுறையில் பணியும் ஒதுக்கீடு செய்ய அரசை வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.