அறிவிப்பதற்கு முன் யோசிக்கவே மாட்டீர்களா?அதிமுக அமைச்சர்களை விளாசும் ஸ்டாலின்

 

அறிவிப்பதற்கு முன் யோசிக்கவே மாட்டீர்களா?அதிமுக அமைச்சர்களை விளாசும் ஸ்டாலின்

அறிவிப்பதற்கு முன் யோசிக்கவே மாட்டீர்களா?; எண்ணித் துணிக கருமம் என அமைச்சர்களை கேட்டுக்கொள்கிறேன் என்று மு.க. ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

மின்வாரிய பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கப் போவதாக அதிமுக அரசு சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியானது. இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், அதிமுக அரசும், மின் துறை அமைச்சர் தங்கமணியும் ஊழல் செய்வதற்காக மின்வாரியத்தின் ஒவ்வொரு பகுதியாக தனியாருக்கு தாரைவார்த்து வருகின்றனர்.

அறிவிப்பதற்கு முன் யோசிக்கவே மாட்டீர்களா?அதிமுக அமைச்சர்களை விளாசும் ஸ்டாலின்

அவ்வாறு செய்யும் பட்சத்தில் மின்வாரிய சங்கத்தினர் அனைவரும் நடத்தும் போராட்டத்திற்கு திமுக முழுமையான ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கும். அத்துடன் திமுக அரசு அமையும் போது ஒப்பந்தங்களில் உள்ள லாப கணக்குகளை ஆராய்ந்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

அறிவிப்பதற்கு முன் யோசிக்கவே மாட்டீர்களா?அதிமுக அமைச்சர்களை விளாசும் ஸ்டாலின்

இதையடுத்து மின்வாரிய பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் எண்ணம் கைவிடப்படுவதாக அமைச்சர் தங்கமணி அறிவித்தார். இதேபோல் 2021 ஜனவரி 1 முதல் குப்பை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து குப்பை கொட்ட கட்டணம் வசூலிக்கும் முறை காலவரையின்றி ரத்து செய்யப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் திமுக மு.க. ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில், “மின் வாரியப் பணிகளை தனியாருக்கு ஒப்படைப்பதை எதிர்த்துப் போராடுவோம் என்றேன். வாபஸ் பெற்றார் அமைச்சர் தங்கமணி. ‘குப்பை கொட்டவும் வரி’ அறிவிப்பை ரத்து செய்யாவிட்டால், கழக ஆட்சி செய்யும் என்றேன். வாபஸ் பெற்றார்
அமைச்சர் வேலுமணி. அறிவிக்கும் முன் யோசிப்பதில்லையா? எண்ணித்துணிக கருமம்!” என்றார்.