ஸ்மிரிதி மந்தனாவின் அதிரடி ஆட்டத்தால் சாம்பியன் பட்டம் வென்ற ட்ரைல்பிளேசர்ஸ் அணி!

 

ஸ்மிரிதி மந்தனாவின் அதிரடி ஆட்டத்தால் சாம்பியன் பட்டம் வென்ற ட்ரைல்பிளேசர்ஸ் அணி!

பெண்கள் டி20 சேலஞ்ச் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவருகிறது. ஷார்ஜாவில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான ட்ரைல்பிளேசர்ஸ் அணியும் , ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான சூப்பர்நோவாஸ் அணியும் மோதின. ட்ரைல்பிளேசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஸ்மிரிதி மந்தனாவும் டோட்டினும் களமிறங்கினார். மந்தனா ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். முதல் விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்த நிலையில் டோட்டின் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ஸ்மிரிதி மந்தனா 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் ட்ரைல்பிளேசர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் குவித்தது. சூப்பர்நோவாஸ் அணி தரப்பில் ராதா யாதவ் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஸ்மிரிதி மந்தனாவின் அதிரடி ஆட்டத்தால் சாம்பியன் பட்டம் வென்ற ட்ரைல்பிளேசர்ஸ் அணி!

119 என்ற இலக்குடன் களமிறங்கிய சூப்பர்நோவாஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அத்தபத்து, ரோட்ரிகஸ் களமிறங்கினர். அத்தபத்து 6 ரன்களிலும் , ரோட்ரிகஸ் 13 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த தான்னியா பாட்டியா 14 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் சிரிவர்தனே ஜோடி சேர்ந்தனர். ஹர்மன்பிரீத் கவுர் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிரிவர்தனே 19 ரன்கள் மட்டுமே டுத்தார்.20 ஓவர் முடிவில் 7 விக்கெட்களை இழந்த சூப்பர்நோவாஸ் அணி வெறும் 102 ரன்கள் மட்டுமே எடுத்து ட்ரைல்பிளேசர்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது.