பெண்களை வீட்டில் அடைத்து செக்ஸ் டார்ச்சர்… தொழிலதிபர்களுடன் உல்லாசம்!- பொள்ளாச்சியை விஞ்சிய ஆத்தூர் அரசியல்வாதி

பெண்களை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ள அரசியல் பிரமுகர், அவரது நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தங்கள் வலையில் விழும் பெண்களை தொழிலதிபர்களுக்கு சப்ளை செய்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் மந்தைவெளி பகுதியை சேர்ந்த சந்து மணி ராஜா என்பவரின் மகன் சின்னதுரை (30). மக்கள் தேசம் கட்சியின் நகர செயலாளராக உள்ள இவரது நண்பர் ஆத்தூர் ஜோதி நகரை சேர்ந்தவர் மோகன்பாபு (28). இருவரும் ஆத்தூர் விநாயகபுரத்தில் வாடகை வீட்டில் தங்கி வந்தனர். இதனிடையே, இந்த வீட்டில் 4 பெண்கள் அடைக்கப்பட்டு உள்ளதாக ஆத்தூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் அதிரடியா வீட்டுக்குள் நுழைந்தனர். அப்போது சின்னதுரை, மோகன்பாபு ஆகியோருடன் 4 பெண்கள் இருந்தது தெரியவந்தது. போலீஸாரை பார்த்ததும் அந்த 4 பெண்களும் கண்ணீர் விட்டு கதறினர். விசாரணையில் மோகன்பாபு, சின்னதுரை ஆகியோர் அந்த பெண்களை அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததும், இதே போன்று பல பெண்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்ததும் தெரியவந்தது. மேலும் போலீஸார் நடத்தி விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

செல்போன் மூலமும், முகநூல் மற்றும் வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பல பெண்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் சின்னதுரை, மோகன்பாபுவும், பின்னர் அந்த பெண்களில் யாருக்காவது ஆண்களுடன் தொடர்பு உள்ளதா? என்பதை மோப்பம் பிடிப்பார்களாம். கணவர் தவிர வேறு ஆண்களுடன் தொடர்பு உள்ள பெண்களை கண்டுபிடித்து, அந்த பெண்களை தொடர்பு கொண்டு, ஆண்களுடன் உள்ள தொடர்பை உனது குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் இருக்க வேண்டும் என்றால், எங்களது வீட்டுக்கு வந்து, நாங்கள் சொல்லும் நபர்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கூறி 2 பேரும் மிரட்டி வந்துள்ளனர். இதன்படி அவர்கள் வாடகைக்கு வசித்து வந்த வீட்டுக்கு 10-க்கும் மேற்பட்ட பெண்களை அழைத்து வந்து உல்லாசமாக இருந்ததுடன், வேறு சிலருடனும், அந்த பெண்களை தங்க வைத்து, பணம் சம்பாதித்துள்ளனர்.

ஆத்தூர், நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த வாலிபர்கள், தொழில் அதிபர்கள் ஆகியோர் இவர்களிடம் சிக்கும் பெண்களை கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருந்துள்ளனர். பூங்கா, சினிமா தியேட்டர் என பொது இடங்களில் ஆண்களுடன் வரும் பெண்களை நோட்டமிடுவார்களாம். இதில் கணவரை தவிர்த்து வேறு நபருடன் வரும் பெண்களை கண்டுபிடித்து, அவர்களை மிரட்டி தங்களது வலையில் விழ வைத்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களிடம் தொழில் அதிபர்கள் சிலரின் மனைவிகளும், கணவரை பிரிந்து வாழும் பெண்களும் சிக்கி உள்ளனர்.

மோகன்பாபு, சின்னதுரையை கைது செய்த காவல்துறையினர், 4 பெண்களிடமும், வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது, ஒழுங்காக இருக்க வேண்டும் என்று எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். கைதான 2 பேரும் எத்தனை பெண்களை சிக்க வைத்து கொடுமைப்படுத்தி உள்ளனர்? அவர்களுக்கு வேறு யாருடன் தொடர்பு உள்ளது? என்பது உட்பட பல்வேறு விசாரணை நடத்தி வரும் கோணங்களில் போலீஸார், இதில் தொடர்புடைய சில வாலிபர்களை தேடி வருகிறார்கள். பொள்ளாச்சியை விஞ்சும் அளவுக்கு ஆத்தூரில் நடந்துள்ள இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisment -

Most Popular

இந்த வாரம் முதலீட்டாளர்களுக்கு ரூ.1.71 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 850 புள்ளிகள் உயர்ந்தது..

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் ஒட்டு மொத்த அளவில் ஏற்றம் கண்டது. இந்த வாரத்தின் முதல் 2 தினங்களில் வர்த்தம் முதலீட்டாளர்களை ஏமாற்றியது. இருப்பினும் அதற்கு அடுத்த 3 நாட்களில் பங்கு...

ஊரடங்கால் வீட்டில் முடங்கினாலும் உடல்நலனில் அக்கறை தேவை!

ஊரடங்கு... எல்லோர் வாழ்க்கையையும் புரட்டிப்போட்டிருக்கிறது. ஒட்டுமொத்த குடும்பமும் மாதக்கணக்கில் வீடுகளில் முடங்கிக் கிடக்கிறது. முதல்நாள் பார்த்த தன் தந்தையின் முகத்தை மறுநாள் காலையில் பார்த்த பிள்ளைகள் இப்போது நாள் முழுக்க பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்....

கொரோனோ நோயாளிகளின் வசதிக்காக பேட்டரி கார் வசதி அறிமுகம்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனோ நோயாளிகளின் வசதிக்காக பேட்டரி கார் வசதி நாளை அறிமுகப்படுத்தப்படுகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனோ வார்டில் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை அழைத்து செல்வதற்காக...

ரத்தசோகை போக்கும் முளைக்கீரை வடை!

கீரை வடை... டீக்கடைகளிலும், ஹோட்டல்களிலும் சாப்பிட்ட இந்தக் கீரை வடையை வீடுகளிலும் செய்து சாப்பிடலாம். இன்றைய சூழலில் சுகாதாரமான, சுத்தமான உணவு கிடைக்குமா? என்ற ஏக்கம் உள்ளது. எனவே, நம் வீடுகளில் இந்தக்...
Open

ttn

Close