பெண்கள் கிரிக்கெட் வீரர்கள் ஐக்கிய அமீரகம் பயணம்! #WomensT20Challenge

பெண்கள் கிரிக்கெட் வீரர்கள் ஐக்கிய அமீரகம் பயணம்! #WomensT20Challenge

பெண்கள் கிரிக்கெட் டி20 சேலஞ்ச் போட்டி வரும் நவம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் சூப்பர் நோவாஸ், டிரெயில் ப்ளேயர்ஸ், வெலாஸிட்டி ஆகிய மூன்று அணிகள் ஆடுகின்றன.

இந்த அணி இந்திய வீரர்களும் வெளிநாட்டு வீரர்களும் கலந்து தேர்தெடுக்கப்பட்டிருக்கிறது. ஆண்கள் கிரிக்கெட்டிற்கு ஒரு ஐபிஎல் போல பெண்கள் கிரிக்கெட்டுக்கான மினி ஐபில் போல
WomensT20Challenge.

பெண்கள் கிரிக்கெட் வீரர்கள் ஐக்கிய அமீரகம் பயணம்! #WomensT20Challenge

வெலாஸிட்டி அணிக்கு கேப்டன் மிதாலி ராஜ். உதவி கேப்டனாக வேதா கிருஷ்ணமூர்த்தி. சுஷ்மா வர்மா விக்கெட் கீப்பர். இதில் இங்கிலாந்து, பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

டிரெயில் ப்ளேஸர்ஸ் அணியின் கேப்டன் மந்தனா, உதவி கேப்டன் தீப்தி ஷர்மா. இந்த அணியில் பங்களாதேஷ், இங்கிலாந்து, தாய்லாந்து மற்றும் ஐஸ்லாந்து நாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

பெண்கள் கிரிக்கெட் வீரர்கள் ஐக்கிய அமீரகம் பயணம்! #WomensT20Challenge

சூப்பர் நோவாஸ் அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் கேப்டன். உதவி கேப்டன் ஜெமிமா, ரோட்ரிக்ஸ். இந்த அணியில் இலங்கை, ஐஸ்லாந்து, சவுத் ஆப்பிரிக்கா நாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளோடு இருமுறை மோதும். அதில் கிடைத்த புள்ளிகளின் அடிப்படையில் இறுதிப்போட்டிக்கு இரு அணிகள் தேர்வாகும்.

பெண்கள் கிரிக்கெட் வீரர்கள் ஐக்கிய அமீரகம் பயணம்! #WomensT20Challenge

நவம்பர் 4-ம் தேதி முதல் போட்டியில், 5 மற்றும் 7-ம் தேதிகளில் அடுத்தடுத்த போட்டிகளும் நடைபெற உள்ளன. இறுதிப் போட்டி நவம்பர் 9-ம் தேதி நடக்கும்.

இதில் கலந்துகொள்ள வீரர்கள் குழு குழுவாக ஐக்கிய அமீரகம் செல்கின்றனர்.