Home க்ரைம் கொத்தடிமையாக பணிபுரிந்த ஜார்கண்ட் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை ! வேலை செய்யும் இடங்களில் பலர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் !!

கொத்தடிமையாக பணிபுரிந்த ஜார்கண்ட் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை ! வேலை செய்யும் இடங்களில் பலர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் !!

ஜார்கண்ட்டை சேர்ந்த பெண் ஒருவர், கர்நாடக கும்பல்கோடு பகுதியில் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். அவர் தங்குமிடத்தில் இரண்டு ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவர் தப்பிக்க முயற்சித்தபோதும் மேலும் ஒரு ஒப்பந்தக்காரரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்.
அந்த பெண்ணுக்கு ஏழு வயதில் குழந்தை உள்ளது. ஜார்கண்டை சேர்ந்த அந்த பெண், அவள் சினேகிதி மற்றும் ஐந்து வயது குழந்தை எட்டு மாதங்களுக்கு முன்பு அவர்களுக்கு வேலை கொடுப்பதாக புதுதில்லிக்கு அழைத்துச் சென்றுள்ளார் தமாரு என்பவர். பின்னர் அவர்கள் கும்பல்கோடு பகுதியில் உள்ள தொழிற்சாலையில் கொத்தடிமையாக வேலை செய்வதற்காக அவர்கள் விற்கப்பட்டதாக தெரிகிறது. அங்கே இரண்டு ஆண்கள் அவர்களைத் துன்புறுத்தி வந்துள்ளனர்.

representative image

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் அங்கிருந்து தப்பி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில் “எங்களுக்கு வேலை தந்தவர்கள் தங்களை சுரேஷ் கோர் மற்றும் நூர் இஸ்லாம் அன்சாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர், தொழிற்சாலையில் பணிகளை எங்களுக்கு சொல்லி கொடுக்கும்போது துன்புறுத்தினர். மேலும் ரூ.9,000 மாத சம்பளம் தருவதாக கூறிவிட்டு தினக்கூலியாக ரூ.200 மட்டுமே தந்தனர். இதனால் நானும் எனது நண்பரும் கொட்டகையிலிருந்து தப்பிக்க முடிவு செய்தோம். அவர்கள் என்னை ஒரு அறையில் பூட்டி நூர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அடுத்த நாள், நூர் மற்றும் சுரேஷ் இருவரும் திரும்பி வந்து என்னை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்தனர். இதை வெளியில சொன்னால் கொலை செய்வோம் என்று மிரட்டினார்கள். அவர்களுக்குப் பயந்து, நாங்கள் சுமார் இரண்டு மாதங்கள் துன்பங்கள் அனுபவித்தோம். பின்னர் ஒருவழியாக அவர்களிடம் இருந்து தப்பித்து அஸ்கர் அலி முஸ்தாப் என்பவரிடம் தஞ்சம் அடைந்தோம். அவர் எங்களை ஒரு கட்டுமான தளத்திற்கு அழைத்துச் சென்று உணவு மற்றும் தங்குமிடம் கொடுத்தார். பின்னர், அவர் என்னுடன் தவறாக நடந்து கொள்ளத் தொடங்கினார். இதனால் அவர் மீது கெங்கேரி போலீசில் புகார் அளித்தேன். இதையடுத்து தொழிலாளர் கொட்டகையைச் சேர்ந்த ஒப்பந்தக்காரரான அஸ்கரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

ஃபைசர் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளித்த இன்னொரு நாடு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 6 கோடியே 62 லட்சத்து 30 ஆயிரத்து 912 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 4 கோடியே 58...

ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் மரியாதை!

ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மரியாதை செலுத்தினர். கருப்பு சட்டை அணிந்த ஓபிஎஸ் - இபிஎஸ்...

சபரிமலையில் அதிகரிக்கும் கொரோனா: தேவஸ்தான ஊழியர்கள் உட்பட 17 பேர் பாதிப்பு!

சபரிமலை தேவஸ்தான ஊழியர்கள்,காவலர் உட்பட 17 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் சபரிமலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு 2000 பக்தர்கள் மட்டுமே...

பூந்தமல்லியில் காலேஜே இல்ல : அப்பல்லோ கல்லூரியிடம் பணத்தை இழந்த ஏழை மாணவி!

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த சரண்யா என்ற மாணவி குடும்ப சூழல் காரணமாக பகுதி நேர வேலை செய்து கொண்டே படிக்க வேண்டும் என்று எண்ணி வந்துள்ளார். இதனால் அவர் அப்பல்லோ...
Do NOT follow this link or you will be banned from the site!