“தலைக்கவசம் அணியாத பெண் ,தரக்குறைவாக பேசிய காவலர்” – பொது இடத்தில் போலீசை போட்டு தாக்கிய பெண்.

“தலைக்கவசம் அணியாத பெண் ,தரக்குறைவாக பேசிய காவலர்” – பொது இடத்தில் போலீசை போட்டு தாக்கிய பெண்.

டூ வீலரில் போகும்போது ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்து விதிகளை மீறிய ஓரு பெண்ணை, ஒரு டிராபிக் போலீஸ் தரக்குறைவாக பேசியதால், அந்த போலீசை அந்த பெண் தாக்கும் வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளது.

“தலைக்கவசம் அணியாத பெண் ,தரக்குறைவாக பேசிய காவலர்” – பொது இடத்தில் போலீசை போட்டு தாக்கிய பெண்.

தெற்கு மும்பையின் கல்பாதேவி பகுதியில் ஒரு பெண் தனது இரண்டு சக்கர வாகனத்தில் சாலையில் போய்க்கொண்டிருந்தார் .அப்போது அங்கிருந்த ஒரு ட்ராபிக் போலீஸ் ,பில்லியனில் சவாரி செய்யும் போது ஏன் ஹெல்மெட் அணியவில்லை என்று அந்த பெண்ணை தடுத்து நிறுத்தினார்.அப்போது பெண்ணுக்கும், போக்குவரத்து காவலருக்கும் இடையே ஒரு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களிடையே நடந்த வாக்கு வாதத்தின் போது அந்த போலீஸ் தன்னை வாய்மொழியாக துஷ்பிரயோகம் செய்ததாக அந்த பெண் கூறினார். அதைத் தொடர்ந்து அந்த பெண் அந்த காவலரை கடுமையாக தாக்கினார்.

சமூக ஊடகத்தில் வைரலாகும் இந்த வீடியோவில், அந்தப் பெண் டூட்டியில் இருக்கும் காவலரின் காலரைப் பிடித்து, குறைந்தபட்சம் பத்து தடவையாவது பொதுமக்கள் முன்னிலையில் அறைவதைக் காணலாம், அதே நேரத்தில் நீல நிற சட்டை அணிந்த ஒரு வாலிபர் , அவரது மொபைல் போனில் அந்த தாக்குதலை படமெடுக்கிறார் . பின்னர், அந்த இடத்தில் இருந்த ஒரு பெண் போலீஸ்காரர் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தார்.பின்னர் போலீசை தாக்கிய அந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

“தலைக்கவசம் அணியாத பெண் ,தரக்குறைவாக பேசிய காவலர்” – பொது இடத்தில் போலீசை போட்டு தாக்கிய பெண்.