கொசுவை விரட்ட புகை போட்ட பெண் உயிரிழப்பு!

 

கொசுவை விரட்ட புகை போட்ட பெண்  உயிரிழப்பு!

கொசுவை விரட்ட நினைத்து புகை போட்ட பெண் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொசுவை விரட்ட புகை போட்ட பெண்  உயிரிழப்பு!

சென்னை மாநகராட்சியில் டெங்கு காய்ச்சலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் வீடுகளில் தொட்டி, கிணறு, டயர்கள் ,உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் போன்ற தேவையற்ற பொருட்களை கண்டறிந்து அவற்றை அழிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் மழை அடிக்கடி பெய்து வருவதால் கொசுக்கள் தொல்லை அதிகரித்து விட்டது.

கொசுவை விரட்ட புகை போட்ட பெண்  உயிரிழப்பு!

இந்நிலையில் சென்னை பல்லாவரம் அருகே கொசுவை விரட்ட புகை போட்ட நிலையில் மூச்சுத்திணறலால் பெண் உயிரிழந்தார். பம்மல் திருவள்ளுவர் தெருவில் வீட்டில் புகையால் மூச்சுத்திணறி புஷ்ப லட்சுமி என்கின்ற 55 வயதான பெண் உயிரிழந்தார். காலையில் வீட்டில் இருந்து புகை வருவதை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் மயங்கி கிடந்த முதியவர் , சிறுவன் உள்ளிட்ட 3 பேர் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.