உள்ளாடையை கழட்டி முகமூடியாக அணிந்த பெண் – உக்ரைனில் நடந்த வேடிக்கை சம்பவம்

 

உள்ளாடையை கழட்டி முகமூடியாக அணிந்த பெண் – உக்ரைனில் நடந்த வேடிக்கை சம்பவம்

கியே: உக்ரைனில் உள்ள தபால் நிலையம் ஒன்றில் பெண் ஒருவர் தனது உள்ளாடையை கழட்டி முகமூடியாக அணிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உக்ரைன் நாட்டில் இதுவரை சுமார் 22 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 658 பேர் கொரோனா தொற்றுநோயால் இறந்துள்ளனர். அதனால் மற்ற நாடுகளை போலவே அந்நாட்டிலும் கொரோனா பரவலை தடுக்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அரசு மக்களுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் சிலர் அதை சரியாக கடைபிடிப்பதில்லை. அதற்கு உதாரணமாக ஒரு வேடிக்கையானசம்பவம் நடந்துள்ளது.

கியேவில் உள்ள நோவயா போஷ்டா தபால் நிலையத்தில் ஒரு பெண் சென்றிருந்தார். அவர் அரசு வழிகாட்டுதலை பின்பற்றாமல் முகமூடி அணியாமல் சென்றார். அதனால் அவரை முகமூடி அணிந்து கொண்டு வருமாறு அங்கிருந்த ஊழியர் கூறியுள்ளார். அப்போதுதான் வாடிக்கையாளர் சேவையை தங்களால் உங்களுக்கு வழங்க முடியும் என்று அப்பெண்ணிடம் தபால் நிலைய ஊழியர்  கூறியுள்ளார்.

இதனால் கடும் கோபமுற்ற அந்தப் பெண் உடனடியாக தனது ஜீன்ஸ் பேண்ட்டை கழற்றி அதன் பிறகு உள்ளாடையையும் கழற்றி அதை முகமூடியாக அணிந்து கொண்டார். இந்த செயல் அங்கிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது. அத்துடன் அப்போது அங்கு நிறைய வாடிக்கையாளர்கள் தபால் நிலையத்தில் இருந்தனர்.

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சியை தனது செல்போனில் படம்பிடித்த ஒருவர் அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விட்டார். அதனால் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.