கத்தியை எடுத்தார் -கழுத்தில் வைத்தார் -கொரானா டெஸ்ட் எடுக்க வந்த பெண் செஞ்ச விபரீத வேலை .

கத்தியை எடுத்தார் -கழுத்தில் வைத்தார் -கொரானா டெஸ்ட் எடுக்க வந்த பெண் செஞ்ச விபரீத வேலை .

கொரானா டெஸ்ட் எடுக்க வந்திருப்பதாக பொய் சொல்லி ஒரு மூதாட்டியிடம் 3 லட்சம் நகைகளை கொள்ளையடித்த பெண்ணை தேடி வருகின்றனர் .

கத்தியை எடுத்தார் -கழுத்தில் வைத்தார் -கொரானா டெஸ்ட் எடுக்க வந்த பெண் செஞ்ச விபரீத வேலை .

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் 74 வயதான சுவாதி பாட்டீல் என்ற பெண் தன்னுடைய 9 வயதான பேரனுடன் வீட்டில் தனியாக இருந்தார் .அப்போது அவரின் கணவர் மற்றும் மகன் ,மருமகள் ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர் .அப்போது அந்த பெண் தனியாக இருப்பதையறிந்த ஒரு சுகாதார பணியாளர் வேடமிட்ட ஒரு 35வயதான பெண் அந்த வீட்டிற்கு வந்தார் .
அவர் அந்த ஸ்வாதியிடம் தான் இங்கு யாருக்காவது கொரானா இருக்கிறதா என்று டெஸ்ட் செய்ய வந்திருக்கிறேன் என்றார் .அதை உண்மையென்று நம்பிய அந்த மூதாட்டி அந்த பெண்ணை வீட்டிற்குள் அழைத்து அமர சொன்னார் .அப்போது அந்த பெண் கொஞ்சம் குடிக்க தண்ணீர் கேட்டார் ,அப்போது அந்த ஸ்வாதி தண்ணீர் எடுக்க சென்றார் .அந்த நேரத்தில் அந்த பெண் ஒரு கத்தியை எடுத்து அந்த பெண்ணை குத்திவிடுவதாக மிரட்டினார் .அதை பார்த்து பயந்த அந்த பெண் அமைதியானார். பின்னர் அந்த பெண் அந்த பாட்டியின் கழுத்திலிருந்த நகைகள் மற்றும் வீட்டிலிருந்த பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றார் .அவற்றின் மதிப்பு 3.10 லட்சம் என்று கூறினார்கள் .அதன் பிறகு இந்த கொள்ளை பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .போலீசார் விரைந்து வந்து அந்த கொள்ளையடித்து சென்ற பெண் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர் . அந்த பெண்ணை கைது செய்ய வொர்லி போலீசார் தனி குழுக்களை அமைத்துள்ளனர். அந்தப் பெண்ணும் அவரது பேரனும் பாதுகாப்பாக இருப்பதாகபோலீசார் கூறினர்

கத்தியை எடுத்தார் -கழுத்தில் வைத்தார் -கொரானா டெஸ்ட் எடுக்க வந்த பெண் செஞ்ச விபரீத வேலை .
shadow man with knife on red background