“உடையில்லாத போட்டோ அனுப்பினால் , உள்ளாடை அனுப்புவோம் “-போலி மெஸேஜ் அனுப்பி பெண்களை காலி செய்யும் கூட்டம்.

 

“உடையில்லாத போட்டோ அனுப்பினால் , உள்ளாடை அனுப்புவோம் “-போலி மெஸேஜ் அனுப்பி பெண்களை காலி செய்யும் கூட்டம்.


பல பெண்களுககு ‘இலவசமாக உள்ளாடைகள் அனுப்புகிறோம்’ என்று போலி மெஸேஜ் அனுப்பி அவர்களின் நிர்வாண போட்டோவை வாங்கிய கூட்டத்தை போலீஸ் தேடி வருகிறது .

“உடையில்லாத போட்டோ அனுப்பினால் , உள்ளாடை அனுப்புவோம் “-போலி மெஸேஜ் அனுப்பி பெண்களை காலி செய்யும் கூட்டம்.

குஜராத்தின் அகமதாபாத்தில் வசித்து வரும் ஒரு டீனேஜ் பெண்னுடைய போனுக்கு டிசம்பர் 3ம் தேதியன்று ஒரு மெஸேஜ் வந்தது .அந்த மெஸேஜில் உங்களின் விலாசத்தை அனுப்பினால் இலவசமாக உள்ளாடைகள் அனுப்புவோம் என்று இருந்தது .அதை பார்த்த அந்த பெண் தன்னுடைய விலாசத்தை அனுப்பினார் .பிறகு டிசம்பர் 17ம் தேதி அவருக்கு வந்த மெஸேஜில் ‘போட்டோவை அனுப்பினால் உங்களுக்கு இலவசமாக உள்ளாடைகளை’ அனுப்பி வைப்போம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது .அந்த மெஸேஜை உண்மையென்று நம்பிய அந்த பெண் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் நம்பருக்கு வாட்ஸ் அப்பில் தன்னுடைய போட்டோவை அனுப்பிவைத்தார் .
அந்த போட்டோவை பெற்றுக்கொண்ட நபர் ,மீண்டும் அந்த பெண்ணை தொடர்புகொண்டார் .அப்போது அவர் அந்த பெண்ணிடம் தங்களின் நிர்வாண போட்டொவை உடனே அனுப்பி வையங்கள் இல்லையென்றால் தாங்கள் அனுப்பிய இந்த போட்டோவை மார்பிங் செய்து ஊடகத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினார் .ஆனால் அதற்கு அந்த பெண் எந்த பதிலும் தெரிவிக்காமல் போனை பயந்துகொண்டு கட் பண்ணி விட்டார் .அதன் பிறகு அந்த நபர் மீண்டும் மீண்டும் அந்த பெண்ணுக்கு போன் செய்தார் .அப்போது அவரின் நிர்வாண போட்டோவை அனுப்ப முடியுமா இல்லையென்றால் உங்களின் போட்டோவை சமுக ஊடகத்தில் வெளியிட போகிறேன் என்று மிரட்டினார் .அதனால் பயந்து போன அந்த பெண் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள் .அப்போது சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் அவரின் ஊடக கணக்குகளை ஆராய்ந்து அவரை தேடி வருகிறார்கள் .

“உடையில்லாத போட்டோ அனுப்பினால் , உள்ளாடை அனுப்புவோம் “-போலி மெஸேஜ் அனுப்பி பெண்களை காலி செய்யும் கூட்டம்.