மருத்துவர் பற்றாக்குறையால் அலைக்கழிக்கபட்ட கர்ப்பிணி : ஆட்டோவிலேயே பிறந்த குழந்தை!

 

மருத்துவர் பற்றாக்குறையால் அலைக்கழிக்கபட்ட கர்ப்பிணி : ஆட்டோவிலேயே பிறந்த குழந்தை!

கோவை துடியலூர் அடுத்த ராக்கிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கௌதம். இவரது மனைவி ஜோதிகுமாரி. பீகாரை சேர்ந்த இவர்கள் ராக்கி பாளையம் பகுதியில் வசித்து வந்ததாக தெரிகிறது. இதனிடையே ஜோதிகுமாரி கர்ப்பம் தரித்த நிலையில் துடியலூரில் உள்ள 24 மணி நேர பிரசவம் பார்க்கும் நகர்ப்புற அரசு சுகாதார நிலையத்தில் ஆரம்பத்திலிருந்தே பரிசோதனை மேற்கொண்டு வந்ததாக தெரிகிறது.

மருத்துவர் பற்றாக்குறையால் அலைக்கழிக்கபட்ட கர்ப்பிணி : ஆட்டோவிலேயே பிறந்த குழந்தை!

இதையடுத்து நேற்று இரவு 11 மணியளவில் ஜோதி குமாரிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் அங்கிருந்து ஆட்டோ மூலம் துடியலூர் நகர்புற சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு மருத்துவர்கள், செவிலியர்கள் என யாரும் இல்லாததால் பிரசவம் பார்க்க இயலாது எனக் கூறி திருப்பி அனுப்பப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் உடனடியாக தாளியூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவரின் பனிக்குடம் உடைந்து ஆட்டோவிலேயே அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

மருத்துவர் பற்றாக்குறையால் அலைக்கழிக்கபட்ட கர்ப்பிணி : ஆட்டோவிலேயே பிறந்த குழந்தை!

இதை தொடர்ந்து அங்கிருந்த தனியார் மருத்துவமனைக்கு தொப்புள் கொடி அகற்ற அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கிருந்த மருத்துவர் சண்முகவடிவு கொரோனா பரிசோதனை செய்யாமல் சிகிச்சை அளிக்கக் கூடாது என்று தெரிவித்தார். இருப்பினும் அவர் பின்பு குழந்தையின் தொப்புள் கொடியை அகற்றினார். மேலும் தாளியூர் அரசு மருத்துவமனையில் ஜோதிகுமார் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

துடியலூர் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படும் என்று அறிவித்த நிலையில் அங்கு மருத்துவர்கள் இல்லாததால் சரிவர பிரசவம் பார்க்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.