மூதாட்டியிடம் நட்பாக பழகி நகையை திருடிய பெண் கைது

 

மூதாட்டியிடம் நட்பாக பழகி நகையை திருடிய பெண் கைது

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் மூதாட்டியிடம் நட்பாக பழகி, 14 தங்க நகைகளை திருடிச்சென்ற பெண்ணை போலீசார் 24 மணிநேரத்தில் கைதுசெய்தனர்.

மூதாட்டியிடம் நட்பாக பழகி நகையை திருடிய பெண் கைது


காரைக்கால் திருவேட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் பவுனம்மாள் (68). ஓய்வுபெற்ற அரசு மருத்துவ பணியாளரான இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அவருடன் வரிச்சிக்குடி பகுதியை சேர்ந்த பாத்திமா (28) என்பவர் நட்பாக பழகி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டிற்கு பாத்திமா வந்தபோது, அவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு, பவுனம்மாள் தாம் அணிந்திருந்த 14 சவரன் நகைகளை கழற்றி வைத்துவிட்டு குளிக்க சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது நகைகள் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மூதாட்டியிடம் நட்பாக பழகி நகையை திருடிய பெண் கைது

புகாரின் பேரில் உடனடியாக விசாரணையில் இறங்கிய போலீசார், பாத்திமாவை பிடித்து விசாரித்தனர். அப்போது, நகைகளை திருடியதை ஒப்புக்கொண்ட பாத்திமா, அவற்றை தனியார் வங்கியில் அடகு வைத்துள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து, அடகுவைத்த 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 14 பவுன் தங்க நகைகளையும், அதன் மூலம் வாங்கிய செல்போனையும் போலீசார் மீட்டனர். புகார் அளித்த 24 மணி நேரத்தில் போலீசார் திருடுபோன நகைகளை மீட்டு, குற்றவாளியை கைதுசெய்த சம்பவம் அனைவரது பாராட்டுதலையும் பெற்றுள்ளது.

மூதாட்டியிடம் நட்பாக பழகி நகையை திருடிய பெண் கைது