“இனி வெங்காயத்தை வங்கி லாக்கர்லதான் வைக்கணும்” -வீட்டிற்குள் புகுந்து வெங்காயத்தை திருடிய கூட்டம்

“இனி வெங்காயத்தை வங்கி லாக்கர்லதான் வைக்கணும்” -வீட்டிற்குள் புகுந்து வெங்காயத்தை திருடிய கூட்டம்

நாளுக்கு நாள் வெங்காய விலை அதிகரித்து வருவதால் அதை பதுக்கும் வியாபாரிகளுக்கு மத்தியில் அதை திருடும் கூட்டமும் பெருகியுள்ளது .

“இனி வெங்காயத்தை வங்கி லாக்கர்லதான் வைக்கணும்” -வீட்டிற்குள் புகுந்து வெங்காயத்தை திருடிய கூட்டம்

புனேவில் வெங்காய விலை கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்கப்படுவதால் அங்கு வெங்காயத்தை உரிக்காமல் ஏழை பெண்கள் கண்ணீர் விடுகிறார்கள் .மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மவுஜ் தேவ்ஜாலி கிராமத்தில் உள்ள ஒரு வெங்காய வியாபாரி தன்னுடைய வீட்டில் 550 கிலோ வெங்காய மூட்டையை பதுக்கி வைத்திருந்தார் .இதை அந்த ஊரிலிருந்த சிலர் கண்டு பிடித்து விட்டனர் .இதனால் அந்த வெங்காய மூட்டைகளை திருடுவதற்கு அவர்கள் திட்டமிட்டனர் .
அதன் படி அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமையன்று இரவு சஞ்சய் பாரதி என்பவரோடு சிலர் சேர்ந்து கொண்டு அந்த வியாபாரி வீட்டில் நுழைந்தனர் .பிறகு அவர் வீட்டிலிருந்த 550 கிலோ வெங்காயத்தை தூக்கி கொண்டு வந்து விட்டனர் .பிறகு காலையில் கண்விழித்து பார்த்த அந்த வியாபரி தனனுடைய வீட்டிலிருந்த வெங்காய மூட்டைகளை காணாததால் திகைத்தார் .உடனே அவர் அங்கிருந்த காவல் நிலையத்தில் புகார் கூறினார் .பொலிஸார் வழக்கு பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள் .அப்போது சஞ்சய் பாரதி மற்றும் போபாட் காலே என்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

“இனி வெங்காயத்தை வங்கி லாக்கர்லதான் வைக்கணும்” -வீட்டிற்குள் புகுந்து வெங்காயத்தை திருடிய கூட்டம்