Home இந்தியா நண்பன் பட பாணியில் வீடியோ காலில் மருத்துவரின் ஆலோசனை பெற்று பெண்ணுக்கு பிரசவம்!

நண்பன் பட பாணியில் வீடியோ காலில் மருத்துவரின் ஆலோசனை பெற்று பெண்ணுக்கு பிரசவம்!

‘நண்பன்’ படத்தில், பிரசவ வலியால் துடித்த நடிகையின் சகோதரிக்கு நடிகை இலியானா வீடியோ கால் மூலம் நடிகர் விஜய்க்கு சில அறிவுரைகளை வழங்குவார். அதேபோல கர்நாடக மாநிலம் ஹாவேரியில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஹனகல் டவுன் பகுதியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி வாசவிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. வலியில் அலறிய வாசவியை பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவரது கணவர் வாகனத்தை தேடி சென்றார். ஆனால் ஞாயிறு ஊரடங்கால் வாகனம் ஏற்பாடு செய்யமுடியவில்லை.

video call

வாசவியின் உறவுக்கார பெண் ஒருவர், உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் மகப்பேறு மருத்துவர் பிரியங்கா மண்டகி வீடியோ கால் மூலம் பிரசவம் குறித்த அறிவுரைகளை வழங்கினார். அதனை கேட்டு, வாசவியின் உறவுக்கார பெண்களான மதுலிகா தேசாய், அங்கிதா, ஜோதி, விஜயலட்சுமி, மாதுரி, முக்தா, சிவலீலா ஆகியோர் பிரசவம் பார்த்தனர். இதில் வாசவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதனைதொடர்ந்து நேற்று முன் தினம் வாசவி மற்றும் குழந்தை ஹனகல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

மாவோயிஸ்டுகள் தாக்குதலில் தமிழக வீரர் வீரமரணம் : முதல்வர் இரங்கல்!

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் இருக்கும் கூகூர் கிராமத்தில் நேற்று முன்தினம் மாவோயிஸ்ட்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அம்மாவட்டத்தின் இருவேறு இடங்களில் மாவோயிஸ்ட்டுகள் கண்ணிவெடி தாக்கியதில், மதுரையை சேர்ந்த வீரர்...

உடலில் படுகாயங்கள்.. சீர்காழி அருகே இளம்பெண் மர்ம மரணம்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே இருக்கும் பெருந்தோட்டம் கிராமத்தில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் கலையழகி(26). இவர் முதுகலை பட்டதாரி. இவரது தாய் தமிழ்செல்வி இன்று காலை, இவரை...

“சன்னி லியோன் புருஷன் மாதிரி ஆகலாம்னுதான் இப்படி செஞ்சேன்” -லக்கிக்கு ஆசைப்பட்டு சிக்கிய நபர் .

நடிகை சன்னி லியோனின் கணவரின் கார் நம்பரை அதிர்ஷ்டத்திற்காக பயன்படுத்திய ஒருவரை போலீசார் கைது செய்தார்கள் சன்னி லியோன் இந்திய...

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து :உயிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிதியுதவி!

சிவகாசி, சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் இருக்கும் தனியார் பட்டாசு ஆலையில் கடந்த 12ம் தேதி ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும்...
TopTamilNews