வருவாய் அமோகம்.. லாபம் சூப்பர்.. முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை கொடுத்த விப்ரோ..

வருவாய் அமோகம்.. லாபம் சூப்பர்.. முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை கொடுத்த விப்ரோ..

விப்ரோ நிறுவனம் 2020 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.2,968 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் முன்னணி சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. விப்ரோ நிறுவனம் 2020 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.2,968 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 20.4 சதவீதம் அதிகமாகும். 2020 செப்டம்பர் காலாண்டில் விப்ரோ நிறுவனம் லாபமாக ரூ.2,465.70 கோடி ஈட்டியிருந்தது.

வருவாய் அமோகம்.. லாபம் சூப்பர்.. முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை கொடுத்த விப்ரோ..
விப்ரோ

2020 டிசம்பர் காலாண்டில் விப்ரோ நிறுவனத்தின் ஒட்டு மொத்த வருவாய் ரூ.15,670 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 3.8 சதவீதம் அதிகமாகும். 2020 செப்டம்பர் காலாண்டில் விப்ரோ நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் வருவாயாக ரூ.15,096.70 கோடியாக இருந்தது. இதே காலாண்டுகளில் டாலர் அடிப்படையில் விப்ரோ நிறுவனத்தின் வருவாய் 3.7 சதவீதத்திலிருந்து 3.9 சதவீதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வருவாய் அமோகம்.. லாபம் சூப்பர்.. முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை கொடுத்த விப்ரோ..
விப்ரோ

2020 டிசம்பர் காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர்) விப்ரோ நிறுவன பங்கின் விலை 23.2 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் 2020ம் ஆண்டில் விப்ரோ நிறுவன பங்கின் விலை 57.1 சதவீதம் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று விப்ரோ நிறுவன பங்கின் விலை 0.23 சதவீதம் உயர்ந்து ரூ.458.75ஆக அதிகரித்தது.