3 மாதத்தில் ரூ.2,390 கோடி லாபம்…. லாக்டவுனில் காலத்தில் தூள் கிளப்பிய விப்ரோ..

3 மாதத்தில் ரூ.2,390 கோடி லாபம்…. லாக்டவுனில் காலத்தில் தூள் கிளப்பிய விப்ரோ..

நாட்டின் முன்னணி ஐ.டி. சேவை நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை நேற்று வெளியிட்டது. 2020 ஜூன் காலாண்டில் விப்ரோ நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.2,390.4 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் சிறிது அதிகமாகும். 2019 ஜூன் காலாண்டில் அந்நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.2,387.6 கோடி ஈட்டியிருந்தது.

3 மாதத்தில் ரூ.2,390 கோடி லாபம்…. லாக்டவுனில் காலத்தில் தூள் கிளப்பிய விப்ரோ..

கடந்த ஜூன் காலாண்டில் விப்ரோ நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.15,571.4 கோடியாக உயர்ந்துள்ளது. 2019 ஜூன் காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.15,566.6 கோடியாக இருந்தது. செயல்பாட்டு வாயிலான மொத்த வருவாய் 1.3 சதவீதம் அதிகரித்து ரூ.14,913.1 கோடியாக உயர்ந்துள்ளது. 2019 ஜூன் காலாண்டில் விப்ரோ நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான மொத்த வருவாய் ரூ.14,716.1 கோடியாக இருந்தது.

3 மாதத்தில் ரூ.2,390 கோடி லாபம்…. லாக்டவுனில் காலத்தில் தூள் கிளப்பிய விப்ரோ..

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் பல முன்னணி நாடுகளில் லாக்டவுன் அமலில் இருந்த போதிலும் விப்ரோ நிறுவனம் லாபத்தில் பின்னடைவை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் எல் அண்டு டிக்கு சொந்தமான ஐ.டி. துறையை சேர்ந்த மைண்ட்ட்ரீ நிறுவனத்தின் லாபமும் அதிகரித்து இருந்தது.