பள்ளி திறக்கும்வரை ‘மைக்ரோ கிளாஸ் ரூம்’ முறை சரிவருமா?

 

பள்ளி திறக்கும்வரை ‘மைக்ரோ கிளாஸ் ரூம்’ முறை சரிவருமா?

இந்தியா இதுவரை சந்தித்திராத பேரிடர் கொரோனா. கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக நாடே முடங்கி கிடக்கிறது. பொதுமக்கள் அதிகம் கூடினால் கொரோனா நோய்த் தொற்று பரவ வாய்ப்பு இருப்பதால் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. அந்தப் பகுதியில் நிலவும் சூழலைப் பொறுத்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் இந்த ஊரடங்கு காலத்தில் பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பதை உத்தேசமாகக்கூட சொல்ல முடியவில்லை. தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பறைகள் தொடங்கப்பட்டு விட்டன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி வாயிலாக பாடம் கற்பிக்கப்படுகிறது.

பள்ளி திறக்கும்வரை ‘மைக்ரோ கிளாஸ் ரூம்’ முறை சரிவருமா?
senthamizh selvan and vizhiyan

இந்தச் சூழலில் நுண் வகுப்பறைகள் அதாவது மைக்ரோ கிளாஸ் ரூம்ஸ் திட்டம் செயல்படுத்திப் பார்க்கலாம் என்கிறார்கள் சமூகச் செயற்பாட்டாளர் செந்தமிழ்ச் செல்வன் மற்றும் கல்வியாளர் விழியன். மைக்ரோ கிளாஸ் ரூம் என்பது பற்றி கூறுமாறு கேட்டேன்.

இணைய வழி கல்வியினை முழுமையாக செயல்படுத்த இயலாத  கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கு என்ன செய்வது? ஒரு மாற்று வழிமுறையினை வடிவமைக்க வேண்டியுள்ளோம். அதன் வெளிப்பாடே இந்த நுண் வகுப்பறைகள்.

நுண்வகுப்பறைகள் ஓர் அறிமுகம்

பள்ளிகளில் வகுப்பறைகள் இயங்க முடியாத போது அந்த வகுப்பறைகளை வீதிக்கு கொண்டு வருவோம், வீதியில் இருக்கும் இல்லங்களுக்கு கொண்டு வருவோம் அதுவே நுண்வகுப்பறைகள். நுண்வகுப்பறைகள் சிறியவை. இரண்டு முதல் ஐந்த குழந்தைகளையும் ஓர் தன்னார்வலரையும் உள்ளடக்கியது. வேறு வேறு வயது என்றாலும் கற்றல் நிகழ்வும்.

பள்ளி திறக்கும்வரை ‘மைக்ரோ கிளாஸ் ரூம்’ முறை சரிவருமா?

புதிய அணுகுமுறை:

பள்ளிகள் முறையாக துவங்க மேலும் சில மாதங்கள் பிடிக்கும். இக்காலத்தில் மாணவர்கள் கற்றலோடு வாழ்ந்திட புதிய வகுப்பறைக்கள்.

இது பாடபுத்தகத்தை அடிப்படையாக இல்லாமல், சில கற்றல் அடைவுகளை சில செயல்பாடுகள் மூலமும் உரையாடல் மூலமும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவது

அறிவொளி இயக்கம் முறைசாராக் கல்வியினை வயதுவந்தவர்களுக்காக தன்னார்வலர்களைக் கொண்டு நடைபெற்றது. அதே அணுகு முறையினை தற்போது பள்ளிக் கல்விக்கும் சாத்தியப்படுத்தும் மாற்று வடிவம்.

கல்விபற்றிய சரியான புரிதலை உருவாக்குவதற்கும் இது  உதவும். இதனை நிகழ்த்தப்போவது மாணவர்களும் பெற்றோர்களும்.

பள்ளி திறக்கும்வரை ‘மைக்ரோ கிளாஸ் ரூம்’ முறை சரிவருமா?

6 முதல் 12 வகுப்பு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முதல் கட்டமாக செய்யலாம், ஆனால் உடனடியாக துவங்க வேண்டும்.

மாணவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே ஒன்று முதல் ஐந்து மாணவர்கள் எண்ணிக்கையில் வகுப்பினை தன்னார்வலர்களைக் கொண்டு நடத்துவது.

சத்துணவினையும் இந்த மையங்களில் மாணவர்களுக்கு வழங்கிடலாம்.

அவர்கள் பெற வேண்டிய பாடபுத்தகங்களையும் பள்ளிதிறக்கும் முன்னரே மாணவர்களுக்கு கொண்டு சேர்த்தல்.

பள்ளி திறக்கும்வரை ‘மைக்ரோ கிளாஸ் ரூம்’ முறை சரிவருமா?

இடம்: தன்னார்வலர் வீடு, மாணவர்களின் வீடு அல்லது வேறு ஆர்வலரின் வீடு, பொது இடமும் யோசிக்கலாம்.

நுண்வகுப்புகள் எப்படி இயங்கும்?

  1. உள்ளூர் தொலைக்காட்சிகளின் மூலம் ஒவ்வொரு தொகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு நேரத்தில் வகுப்புகள் ஒளிபரப்பப்படும்.
  2. நிகழ்ச்சிகளை நேரிடையாகவும் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யலாம். இதனை வீடுகளில் இருக்கும் கேபிள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யலாம்.
  3. வானொலி (எப்.எம்)களில் உள்ளூர் அளவில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பலாம்.
  4. லைவ் நிகழ்ச்சிகளாக இருப்பின் நிகழ்ச்சி முடிந்ததும் அலைபேசி இருப்பின் கேள்விகளை மாணவர்கள் கேள்வி கேட்கலாம். சக மாணவர் கேள்வி கேட்கும்போது மேலும் அவர்கள் கற்பார்கள்
  5. ஆர்வலர்களின் வீடுகளில் போதிய இடைவெளி விட்டு தொலைக்காட்சியினை பார்க்கலாம், வானொலியில் கேட்கலாம். கேள்விகளையும் கற்றதையும் சக மாணவர்களுடன் தன்னார்வலர்களின் தலைமையில் நிகழ்த்தலாம்.

    பள்ளி திறக்கும்வரை ‘மைக்ரோ கிளாஸ் ரூம்’ முறை சரிவருமா?

  6. வாரம் ஒருமுறை சின்னதாக ஒரு Assignment. கற்றதினை வைத்து அவர்களாக கட்டுரையாகவோ, செயல்பாடாகவோ செய்யலாம்.
  7. பள்ளிகள் திறந்தாலும் முழுமையாக அவை இயங்காது. அப்போது நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்த நுண்வகுப்புகள் தொடரலாம்.
  8. இது பாடதிட்டத்தில் இருந்து விலகி இருந்தாலும் கற்றலுக்கு குறைவில்லாமல் இருக்க வேண்டும். பாடதிட்டதிலும் நாட்டம் வர வகைக்கும் ஒரு ஏற்பாடாக இருக்க வேண்டும்.
  9. நிகழ்வுகளை யூடியூப்களில் மாநில அளவில் வலையேற்றி அதனையும் நேரம் கிடைக்கும்போது குழந்தைகள் ஆர்வலர்களின் வீடுகளில் பார்க்கலாம்.
  10. மாணவர்களின் கேள்விகளுக்கு முதலில் நுண்வகுப்புகளில் விடை தேடப்படும், இல்லை எனில் அவை மாவட்ட மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அப்படி கேட்ட கேள்விகளுக்கான வீடியோக்களையோ, ஆடியோக்களையோ தயாரித்து அனைவருக்கும் ஒளிபரப்பப்படும் / ஒலிபரப்பப்படும்.
  11. தன்னார்வலர்கள் கற்றலை ஒருங்கிணைக்க முயல்வார்கள், அவர்களும் கற்பார்கள்.

பள்ளி திறக்கும்வரை ‘மைக்ரோ கிளாஸ் ரூம்’ முறை சரிவருமா?கால அவகாசம் மிகக் குறைவாக உள்ளதால் இதனை மேலும் செழுமைப்படுத்தி உடனடியாக களத்தில் இறங்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் இதனை செயல்படுத்து வேறு வேறு முறைகளை பின்பற்றலாம்.

கல்வி குழந்தைகளுக்கு நெருக்கமாகும். நுண்வகுப்புகள் இணைந்து கல்விக்கான உறுதுணை மையங்களாக தொடர்ந்து செயல்படுத்தலாம் , கோவிட் மறைந்த பின்னரும்’ என்கிறார்கள்.

பள்ளி திறக்கும்வரை ‘மைக்ரோ கிளாஸ் ரூம்’ முறை சரிவருமா?

இதனைச் செயல்முறைப்படுத்தும்போது குழந்தைகளின் சுகாதாரம், பாதுகாப்பு, கற்றல் மதிப்பீடு உள்ளிட்டவை பற்றியும் கூறுகிறார்கள்.

திண்டிவனம் தாய்த்தமிழ்த் தொடக்கப்பள்ளியில் இம்முறை மைக்ரோ கிளாஸ் ரூம்கள் செயல்படுத்தியும் பார்த்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.