அடுத்த போட்டியில் களம் இறங்குவாரா ரோஹித் ஷர்மா?

 

அடுத்த போட்டியில் களம் இறங்குவாரா ரோஹித் ஷர்மா?

நான்கு முறை ஐபிஎல் சாம்பியன் ஆகியுள்ள டீம் மும்பை இண்டியன்ஸ். அதற்கு முக்கியக் காரணம் அந்த அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா. ஆனால், அவர் தற்போது இரண்டு போட்டிகளாக ஆடவில்லை.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் மும்பை இண்டியன்ஸ் அணியின் ஆதிக்கம்தான் உயர்ந்துள்ளது. பாயிண்ட் டேபிளிலில் முதலிடத்தில் உள்ளது மும்பை.11 போட்டிகளில் விளையாடி 7 ஆட்டங்களில் வென்று 14 புள்ளிகளோடு முதலிடத்தில் உள்ளது. டெல்லி, பெங்களூர் அணிகளும் 14 புள்ளிகள்தான் என்றாலும் நெட்ரன்ரேட் அடிப்படையில் மும்பை உச்சத்தில் உள்ளது.

அடுத்த போட்டியில் களம் இறங்குவாரா ரோஹித் ஷர்மா?

இந்த நிலையில் பஞ்சாப் அணியோடு மும்பை மோதியபோது ரோஹித் ஷர்மாவுக்கு காயம் ஏற்பட்டது. அதனால், அவரால் தொடர்ந்து விளையாட முடியவில்லை. அதனால், சென்னை அணியோடு மோதுகையில் பொல்லார்டு கேப்டன் பொறுப்பை ஏற்றார். சிறப்பாக ஆடி, சென்னையை வென்றார். அதே நம்பிக்கையில் பொல்லார்டு தலைமையில் மும்பை இண்டியன்ஸ் ராஜஸ்தான் அணியோடு மோதுகையில் மோசமான தோல்வியைச் சந்தித்தது.

மும்பைக்கு அடுத்த போட்டி, வரும் புதன்கிழமை பெங்களூர் அணியோடு உள்ளது. இந்தப் போட்டியில் பெங்களூர் வென்றால் மும்பையை பின்னுக்குத் தள்ளி, பாயிண்ட் டேபிளில் முன்னுக்குச் சென்றுவிடும். அதனால், இது ரொம்பவே முக்கியமான போட்டி. எனவே, ரோஹித் ஷர்மா மீண்டும் ஆடினால் மும்பை வெற்றிக்கு உதவும் என நினைக்கிறார்கள்.

அடுத்த போட்டியில் களம் இறங்குவாரா ரோஹித் ஷர்மா?

ஆனால், ரோஹித் ஷர்மா பற்றி டி காக் பேசுகையில், ‘ரோஹித் காயத்திலிருந்து மிக வேகமாகக் குணமாகி வருகிறார். விரைவில் களம் காண்பார்’ என்று கூறியிருக்கிறார். உறுதியாக அடுத்த போட்டியில் ஆடுவார் என்று சொல்லவில்லை. அதனால், அடுத்த போட்டியிலும் ரோஹித் விளையாடுவது சந்தேகமே என்று கூறப்படுகிறது.