பாஜகவில் இணைய போகிறாரா குலாம் நபி ஆசாத்!

 

பாஜகவில் இணைய போகிறாரா குலாம் நபி ஆசாத்!

காங்கிரஸ் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத்தின் பதவிக் காலம் வரும் 15ம் தேதியோடு நிறைவடைய உள்ளது. இதனையடுத்து மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் யாரை உட்கார வைக்கலாம் என்று காங்கிரஸ் தலைமை தீவிரமாக யோசித்து வருகிறது. அதேசமயம், எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு அந்த கட்சியின் சில மூத்த தலைவர்களில் ஒருவருக்கு கிடைக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பாஜகவில் இணைய போகிறாரா குலாம் நபி ஆசாத்!

இந்நிலையில் குலாம்நபி, பாஜகவில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மோடிக்கும் எனக்கும் 90களில் இருந்தே பழக்கம் உள்ளது. அந்த பழக்கம் இருவரும் பொது செயலாளராக இருந்தபோது தொடர்ந்தது. இருவரும் டிவி விவாதத்தில் பங்கேற்போம் சண்டையிட்டு கொள்வோம். இருவரும் முதல்வராக இருந்தபோது பழக்கம் ஏற்பட்டது.

பிரதமருடனான கூட்டங்களில் சந்தித்து இருக்கிறோம். பின்னர் நான் சுகாதார அமைச்சராக இருந்தேன். அவர் முதல்வராக தொடர்ந்தார். அப்போது 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை பல்வேறு விஷயங்கள் பற்றிப் பேசுவோம். . 2006ஆம் ஆண்டு காஷ்மீரில் குஜராத் சுற்றுலா பேருந்து தாக்கப்பட்டது. அது பற்றி, மோடியிடம் பேசும்போது நிலைகுலைந்து போனேன். அந்த கதையை குறிப்பிடும் போது தான் மோடி கண்ணீர் விட்டு அழுதார். பாஜகவில் நான் சேரப் போவதாக வதந்தி பரப்புவோருக்கு என்னைப் பற்றி தெரியாது. காஷ்மீரில் கறுப்பு நிற பன் என்று பெய்யுமோ அன்றுதான் நான் பாஜகவிலோ அல்லது வேறு கட்சியிலோ இணைவேன்” என தெரிவித்துள்ளார்.