2-வது டெஸ்ட்டிலாவது வெற்றி பெறுமா இந்தியா அணி?

 

2-வது டெஸ்ட்டிலாவது வெற்றி பெறுமா இந்தியா அணி?

ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் ஆட விருக்கின்றன.

இதுவரை நடந்திருக்கும் ஒருநாள் போட்டித் தொடரில் ஆஸ்திரேலியா அணி 2:1 வென்றது. டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 2:1 தொடரை வென்றது. அவை முடிந்ததும் டெஸ்ட் போட்டித் தொடங்கியது.

2-வது டெஸ்ட்டிலாவது வெற்றி பெறுமா இந்தியா அணி?

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி மிக மோசமாக ஆடியது. இரண்டாவது இன்னிங்க்ஸில் 36 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சித் தோல்வி அடைந்தது இந்திய அணி.

நாளை இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான் இரண்டாம் டெஸ்ட் போட்டித் தொடங்குகிறது.

இந்திய அணியில், ரஹானே (கேப்டன்), மயங் அகர்வால், ஷப்னம் கில், புஜாரா, விஹாரி, ரிஷப் பண்ட், ரவிந்திர ஜடேஜா, ரவிசந்திரன் அஸ்வின், உமேஷ் யாதவ், பும்ரா, முகம்மது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள்.

2-வது டெஸ்ட்டிலாவது வெற்றி பெறுமா இந்தியா அணி?

 இந்திய அணி வெல்லுமா என்ற ஒரு கேள்வி எல்லா ரசிகர்களுக்கும் எழுந்துள்ளது. இந்திய அணியில் மிகப் பெரிய பலவீனம் என்பது அனுபவம் மிக்க மூத்த வீரர்கள் இந்த அணியில் இல்லை என்பதே.

மயங் அகர்வால் – கில் எனும் ஓப்பனிங் ஜோடி எப்படி பார்டனர்ஷிப் செய்வார்கள் என்று இனிதான் கவனிக்க வேண்டும். ஏனெனில், இருவருமே ஆஸ்திரேலிய மண்ணில் இன்னும் முழுமையாக தம்மை வெளிப்படுத்த வில்லை. மயங் அகர்வால் டி20 போட்டிகளில் பெரிய அளவு சோபிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புஜாராவைத்தான் இந்த முறை அதிகம் நம்பியிருக்கும் வீரர். ஆனால், அவர் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்க்ஸிலும் பெரிய ரன்கள் சேர்க்க முடியவில்லை. ஆனால், முதல் இன்னிங்ஸில் நீண்ட நேரம் தன்னால் ஆட முடியும் என்பதைக் காட்டியிருக்கிறார். மேலும், ஏதேனும் ஒருவரின் லூஸ் பந்தைக் கணித்து ஆடுவதைத் தொடர்ந்தார். அதனால், நாளைய ஆட்டத்தில் பழைய பார்ம்க்குச் செல்ல முடியும் என்று தோன்றுகிறது.

2-வது டெஸ்ட்டிலாவது வெற்றி பெறுமா இந்தியா அணி?

ரிஷப் பண்ட், விஹாரி, உமேஷ், சிராஜ் எனப் பலரும் அனுபவம் குறைவான புது வீரர்கள். எனவே, இந்த போட்டியை எப்படி எதிர்கொள்வார்கள்… எப்படி தம்மை வெளிப்படுத்துவார்கள்? என்ரு பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கேப்டன் ஷிப்பைப் பொறுத்த வரை ரஹானே சிறப்பாக தலைமை ஏற்பார் என்று பலராலும் நம்பப்படுகிறது. ஏற்கெனவே இதேபோல ஒரு சூழல் இருந்தபோது சமயோசிதமாகச் செயல்பட்டிருக்கிறார். ஆனால், அணியில் வீரர்கள் பலரும் புதியவர்கள். இவர்களோடு சேர்ந்து ரஹானே ஆடிய ஆட்டங்கள் குறைவு. அதனால், வீரர்களின் பலம், பலவீனம் எந்தளவு சுவிகரித்திருப்பார் என்பதும் சந்தேகமே.

பலவீனங்கள் கடந்தும் நாளைய போட்டியில் வெற்றிக்கணக்கதை இந்திய அணி தொடங்க வேண்டும் என்றுதான் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.