“ஆக்சிஜன் விநியோகத்தை யார் தடுத்தாலும் தூக்கிலிடுவோம்” – டெல்லி உயர் நீதிமன்றம் பரபரப்பு கருத்து!

“ஆக்சிஜன் விநியோகத்தை யார் தடுத்தாலும் தூக்கிலிடுவோம்” – டெல்லி உயர் நீதிமன்றம் பரபரப்பு கருத்து!

இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையே மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள்ளது. ஆக்சிஜன்களைக் கொள்முதல் செய்யும் மத்திய அரசோ மாநில அரசுகளுக்குக் கொடுக்காமல் வஞ்சிப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நேற்று முன்தினம் 25 பேர் உயிரிழந்த நிலையில், இன்று 20 பேர் பலியாகியிருக்கின்றனர். இதற்குக் காரணம் ஆக்சிஜன் கொடுக்காதது தான் என்கின்றனர்.

“ஆக்சிஜன் விநியோகத்தை யார் தடுத்தாலும் தூக்கிலிடுவோம்” – டெல்லி உயர் நீதிமன்றம் பரபரப்பு கருத்து!
“ஆக்சிஜன் விநியோகத்தை யார் தடுத்தாலும் தூக்கிலிடுவோம்” – டெல்லி உயர் நீதிமன்றம் பரபரப்பு கருத்து!

இச்சூழலில் முறையாக ஆக்சிஜன் வழங்க டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு விசாரணையின்போது பதிலளித்த டெல்லி அரசு, “மத்திய அரசிடமிருந்து டெல்லிக்குக் கிடைக்கும் ஆக்சிஜன் அளவு 480 மெட்ரிக் டன். ஆனால் 280 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே மத்திய அரசு வழங்குகிறது. ஆக்சிஜன் பிரச்சினையைச் சரிசெய்யாமல் இருந்து இந்த நிலைமை இப்படியே தொடர்ந்தால் டெல்லி மாநிலம் மொத்தமாக அழிந்துவிடும்.

“ஆக்சிஜன் விநியோகத்தை யார் தடுத்தாலும் தூக்கிலிடுவோம்” – டெல்லி உயர் நீதிமன்றம் பரபரப்பு கருத்து!

யாராலும் காப்பாற்ற முடியாது. இங்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியாத சூழல் இருக்கிறது. எங்களுக்கு ஆக்சிஜன் வழங்கும் தனியார் நிறுவனங்களும் கையை விரிக்கின்றன. டெல்லி மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் கிடைக்க மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க வேண்டும். குறைந்தது 10 ஐஏஎஸ் அதிகாரிகளையாவது ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்னையை கையாள அரசு நியமிக்க வேண்டும்” என்றார்.

இதையடுத்து பேசிய நீதிபதிகள், “ஆக்சிஜன் விநியோகத்தை யார் தடுத்தாலும் அவர்களைத் தூக்கிலிடுவோம்; அத்தகைய மோசமான செயல்களில் ஈடுபடும் யாரையும் நாங்கள் விட மாட்டோம்” என்றனர். மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், இப்போது இருப்பது கொரோனா 2ஆம் அலை அல்ல கொரோனா சுனாமி என்றனர்.