‘கொரோனா’ உங்களைத் தாக்குமா? ஒரு சின்ன ‘டெஸ்ட்..?’

‘கொரோனா’ உங்களைத் தாக்குமா? ஒரு சின்ன ‘டெஸ்ட்..?’

உலகையே மிரட்டிக் கொண்டிருக்கும் கொரோனாவை அடித்து துவம்சம் செய்ய ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் புதிதாக இரண்டு ஆராய்ச்சிகள் வழியாக கொரோனா யாரை எளிதில் தாக்குகிறது எனக் கண்டு பிடித்துச் சொல்லியிருக்கிறார்கள்.

‘கொரோனா’ உங்களைத் தாக்குமா? ஒரு சின்ன ‘டெஸ்ட்..?’

கொரோனா தாக்குதலில் ஒரு நபரின் ரத்த வகை மிக முக்கிய பங்கு வகிக்கிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது குறித்து ஓடென்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனை மற்றும் தெற்கு டென்மார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் குழு நடத்தியது. கொரோனா வைரஸ் பாதித்த 4 லட்சத்து 73 ஆயிரம் பேரின் சுகாதார பதிவேட்டில் இருந்து விஞ்ஞானிகள் தரவுகளை சேகரித்தனர்.அதனை ஆய்வு செய்து தங்கள் முடிவைச் சொல்லியிருக்கிறார்கள். அதாவது ‘0’ ரத்த

‘கொரோனா’ உங்களைத் தாக்குமா? ஒரு சின்ன ‘டெஸ்ட்..?’

வகையைச் சேர்ந்தவர்களை கொரோனா வைரசால் அதிகமாகத் தாக்காது. A மற்றும் AB, ரத்த வகை உள்ளவர்களை கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும் ஆபத்து அதிகம் என்று தெரிவித்துள்ளனர்..

‘கொரோனா’ உங்களைத் தாக்குமா? ஒரு சின்ன ‘டெஸ்ட்..?’

இரண்டாவது ஆய்வு கனடாவில் உள்ள வான்கூவரில், மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்விலும் ‘O’ குரூப் மனிதர்களை கொரோனா அதிகம் பாதிப்பதில்லை ஆனால், ‘A’ மற்றும் ‘AB’ ரத்த வகை உள்ளவர்களுக்கு ஆபத்து அதிகம்தான் என்று தெரிவித்துள்ளன.