வாழை தோட்டத்திற்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்… விவசாயிகள் வேதனை…

 

வாழை தோட்டத்திற்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்… விவசாயிகள் வேதனை…

ஈரோடு

கோபிசெட்டிப்பாளையம் அருகே விவசாய தோட்டத்தில் புகுந்த காட்டுயானைக் கூட்டம் 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தி சென்றதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே தூக்கநாயக்கன் பாளையம் வனசரகத்தை ஒட்டி அமைந்துள்ள விளை நிலங்களில், காட்டுயானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. வனத்துறை சார்பில் அகழி வெட்டுப்பட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையிலும், உரிய பாராமரிப்பின்றி மண் மூடியுள்ளதால் அகழிகளை கடந்து வனவிலங்குள் விளை நிலங்களுக்குள் புகுவது வாடிக்கையாகி உள்ளது.

வாழை தோட்டத்திற்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்… விவசாயிகள் வேதனை…

இந்த நிலையில், நேற்றிரவு வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் வெளியேறிய 3-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் கணக்கம்பாளையம் சுண்டக்கரடு பகுதியில் தட்சணாமூர்த்தி என்பவருக்கு சொந்தமான வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து 100-க்கும் மேற்பட்ட மரங்களை சேதப்படுத்திவிட்டு சென்றன. இதனால் சுமார் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த டி.என்.பாளையம் வனத்துறையினர் சேதமடைந்த வாழை மரங்களை ஆய்வுசெய்தனர். மேலும், சேதமடைந்த வாழை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், காட்டுயானைகளை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதாகவும் உறுதி அளித்துச்சென்றனர்.