கோவை அருகே ரயில் மோதி காட்டுயானை படுகாயம்!

 

கோவை அருகே ரயில் மோதி காட்டுயானை படுகாயம்!

கோவை

கோவை மதுக்கரை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற காட்டுயானை மீது ரயில் மோதியதில், அந்த யானை படுகாயம் அடைந்தது.

கோவை மாவட்டம் மதுக்கரை அருகே நவக்கரை மலை கிராமம் உள்ளது. வனப்பகுதியில் வசிக்கும் விலங்குகள் அந்த பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடந்துசென்று வாலையாறு ஆற்றில் தண்ணீர் அருந்துவது வழக்கம். இந்த நிலையில், இன்று அதிகாலை காட்டுயானைகள் கூட்டம் தண்டவாளத்தை கடந்துசெல்ல முயன்றது.

அப்போது, அந்த வழியாக சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற விரைவு ரயில் மோதியில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை படுகாயம் அடைந்தது. தலை மற்றும் கால் பகுதியில் பலத்த காயமடைந்த அந்த யானை, நகர முடியாமல் அந்த இடத்திலேயே படுத்து கிடந்தது.

கோவை அருகே ரயில் மோதி காட்டுயானை படுகாயம்!

விபத்து குறித்து தகவலின் பேரில கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் கால்நடை மருத்துவர்கள் மற்றம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்த யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தேவைப்படும் பட்சத்தில் யானையை வேறு இடத்தில் வைத்து சிகிச்சை அளிக்கவும் வனத்துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.

இதனிடையே, காட்டுயானைகள் தண்டவாளத்தை கடந்து செல்லும் என்பதால் ரயில் ஓட்டுநர்கள் மெதுவாக செல்ல வேண்டுமென வனகிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.