Home மாவட்டங்கள் கன்னியாகுமரி ஆசைக்கு தடையாக இருந்த மனைவி அடித்துக்கொலை... ஒரு மாதத்திற்கு பின் சிக்கிய கணவர்...

ஆசைக்கு தடையாக இருந்த மனைவி அடித்துக்கொலை… ஒரு மாதத்திற்கு பின் சிக்கிய கணவர்…

கன்னியாகுமரி

ஆசைக்கு தடையாக இருந்த மனைவி அடித்துக்கொலை...  ஒரு மாதத்திற்கு பின் சிக்கிய கணவர்...

கன்னியாகுமரியில் இளம்பெண் மரணமடைந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, 16 வயது சிறுமியை அடைவதற்காக கணவரே அடித்துக்கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஆசைக்கு தடையாக இருந்த மனைவி அடித்துக்கொலை...  ஒரு மாதத்திற்கு பின் சிக்கிய கணவர்...

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பனிப்பிச்சை. இவருக்கு மேகலா(32) என்ற மனைவியும, ஒரு மகன் மற்றுடம் மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் 17ஆம் தேதி மேகலா வீட்டில் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்தார். உடல்நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாக பனிப்பிச்சை தெரிவித்ததை நம்பி, உறவினர்கள் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் மேகலாவின் சகோதரரான அந்தோணியடிமை, அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி, வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் பனிபிச்சை மீது சந்தேகம் கொண்ட போலீசார் அவரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மேகலா அடித்துக்கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல் வெளியானது.

ஆசைக்கு தடையாக இருந்த மனைவி அடித்துக்கொலை...  ஒரு மாதத்திற்கு பின் சிக்கிய கணவர்...

இதுதொடர்பாக அவர் அளித்த வாக்குமூலத்தில், மேகலாவின் உறவினரான 16 வயது சிறுமி ஒருவர், அடிக்கடி அவரது வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது சிறுமியின் மீது பனிப்பிச்சைக்கு மோகம் ஏற்பட்டதால், அவரை அடைய பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். கணவரின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட மேகலா, இதுகுறித்து அவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பனிப்பிச்சை, தனது ஆசைக்கு தடையாக உள்ள மேகலாவை கொல்ல திட்டமிட்டார். இந்த நிலையில் கடந்த மாதம் 17ஆம் தேதி இரவு இந்த பிரச்சினை தொடர்பாக தம்பதியினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த பனிப்பிச்சை மேகலாவை அடித்துக்கொலை செய்தார். பின்னர், மனைவி நோய்வாய் பட்டு இறந்ததாக நாடகமாடி உறவினர்களையும் நம்பவைத்தது தெரியவந்தது.

ஆசைக்கு தடையாக இருந்த மனைவி அடித்துக்கொலை...  ஒரு மாதத்திற்கு பின் சிக்கிய கணவர்...

இதையடுத்து, பனிப்பிச்சையை கைதுசெய்த போலீசார், மேகலாவின் உடலை தோண்டி பிரேத பரிசோதனை நடத்த முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து, அடக்கம் செய்து ஒரு மாதம் கடந்த நிலையில் நேற்று மாலை கல்குளம் வட்டாட்சியர் ஜெகதா முன்னிலையில் மேகலாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, அதே இடத்தில் மருத்துவக் குழுவினரால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சிறுமியை அடைய மனைவியை அடித்துகொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆசைக்கு தடையாக இருந்த மனைவி அடித்துக்கொலை...  ஒரு மாதத்திற்கு பின் சிக்கிய கணவர்...
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“27% இடஒதுக்கீடு வரலாற்று சிறப்புமிக்க முடிவு… சமூக நீதிக்கு முன்னுதாரணம்” – பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் 15 விழுக்காடும், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 50%...

“ஈரோட்டில் உள் விளையாட்டு அரங்கம் உள்பட 82 புதிய திட்டங்கள்”… ஆய்வு பணி நடைபெறுவதாக அமைச்சர் முத்துசாமி தகவல்!

ஈரோடு ஈரோட்டில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் உள் விளையாட்டு அரங்கம் உள்பட 82 புதிய திட்டங்கள் செயல்படுத்த ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, வீட்டு வசதித்...

பிளஸ்-2 மாணவிக்கு அடிக்கடி ஆபாச படத்தை காட்டி பாலியல் தொல்லை – ஆசிரியர் கைது

பிளஸ்- 2 மாணவிக்கு செல்போனில் அடிக்கடி ஆபாச படம் காட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

“இது பாமகவுக்கு கிடைத்த வெற்றி” – வழக்கம்போல அட்டென்டன்ஸ் போட்ட அன்புமணி!

தமிழ்நாட்டில் எந்த அறிவிப்பும் வந்தாலும், “அன்றே அறிக்கை விடுத்தேன்; இது பாமகவுக்கு கிடைத்த வெற்றி” என்று அறிக்கைக்கு ஒரு அறிக்கை விடுவார்கள் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸும் அவரது மகன் அன்புமணி...
- Advertisment -
TopTamilNews